பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0834/ ’10
கெளரவ அக்கில விராஜ் காரியவசம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(ஆ) ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுகின்ற புள்ளிகளுக்கிணங்க தரம் 6 இல் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்ற முதல் 50 பாடசாலைகளில், 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியெய்திய மாணவர்களுக்காக 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி அனைத்துப் பாடசாலைகளிலும் அல்லது ஒருசில பாடசாலைகளில் 2009 ஆம் ஆண்டில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக 2010 ஆம் ஆண்டில் தரம் 6 இல் ஒதுக்கப்பட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கையைப் பார்க்கிலும், 2010ஆம் ஆண்டில் சித்தியடைந்த மாணவர்களுக்காக 2011 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதா என்பதையும்,
(ii) அவ்வாறு குறைவடைந்திருப்பின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்,
(iii) தரம் 6 இன் வெற்றிடங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பின், குறைந்தபட்சம் 2010 இல் ஒதுக்கப்பட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கையை 2011 ஆம் ஆண்டிலும் ஒதுக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,
(iv) இலவசக் கல்விக் கொள்கையை உறுதிப்படுத்துவதற்காக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக நாட்டின் பிரபல்யமான பாடசாலைகளில் ஒதுக்கப்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் குறைக்காமல் பேணிவர மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-03-08
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks