பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0831/ ‘10 கெளரவ விக்டர் அன்ரனி,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) உவர் நீர் மற்றும் களப்புகளில் மீன் பிடிப்பதற்காக தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மீன் குஞ்சுகள் அழிவடைவதால் மீன் வளம் குறைவடைந்துள்ளதென்பதையும், (ii) இதன் காரணமாக மீனவர்களால் போதியளவு மீன் வளத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதென்பதையும் அவர் அறிவாரா? (ஆ) (i) தற்போது பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட அனைத்து வகை வலைகளையும் கைப்பற்றுவதற்கும், தடைசெய்யப்பட்ட வலை வகைகளின் பாவனையை முற்றாக நீக்குவதற்கும் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் யாவையென்பதையும், (ii) தடைசெய்யப்பட்ட வலை வகைகளை பாவனைக்கு எடுக்காதிருப்பதற்கும், அழிப்பதற்கும் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (இ) (i) உவர் நீர், சவர் நீர் (களப்பு) மீன்களைப் பெருக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும், (ii) தடைசெய்யப்பட்ட முறைசாரா வலை பாவனை முறையால் அழிவடைந்துள்ள இயற்கை மீன் இனப்பெருக்க நிலையங்களைப் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும், (iii) மீன் இனப்பெருக்கத்திற்கென விஷேட வலயங்களை ஒதுக்குவதற்கு கருதுகின்றாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-12-07
கேட்டவர்
கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks