பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2010-12-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0830/2010: Fisheries Community

0830/ ‘10 கெளரவ விக்டர் அன்ரனி,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) மீனவ மக்களுக்கு உயர் சமூக அந்தஸ்தினைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு கடற்றொழில் வள மூலங்களை மேம்படுத்தல், கடற்றொழில் வசதிகளை முன்னேற்றல், விற்பனை வசதிகளை வழங்கல் மற்றும் மீனவ மக்களது சிக்கனம் தொடர்பிலான அறிவை வளர்த்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை அவர் குறிப்பிடுவாரா? (ஆ) கடற்றொழில் மந்தமான காலத்தில் மீனவ மக்களது பொருளாதாரத்தை நீடுறுதியாகப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) (i) கருவாடு உலர்த்துதல், மீனை ஜாடிகளில் இட்டு பதப்படுத்துதல், விலங்கு உணவு உற்பத்திக்காக மீன்களைப் பதப்படுத்தல், பனையோலையிலான பொருட்களை தயாரித்தல், தையல் வேலைகள் மற்றும் சிப்பிகளால் அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்தல் ஆகிய வாழ்வாதாரங்களுக்கு மீனவப் பெண்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும், (ii) மேற்படி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-12-07

கேட்டவர்

கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks