04

E   |   සි   |  

 திகதி: 2011-01-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0785/2011: Poultry Industry

0785/’10 கெளரவ அனோமா கமகே,— கால்நடை வளர்ப்பு , கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் , (i) இறைச்சி உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தியின் பொருட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் எண்ணிக்கை, (ii) மாதாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டைகள் மற்றும் கோழி இறைச்சியின் அளவு, (iii) கேழி வளர்ப்புக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானியங்களும் அதற்காக வருடாந்தம் செலவிடப்படுகின்ற தொகையும் வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா? (ஆ) (i) கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முட்டை உற்பத்தி மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்காக எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவையென்பதையும், (ii) இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தின் பொருட்டும் அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்க்கின்ற தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-21

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks