01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0619/2019: Remaining work of Gampola - Dolosbage Road

619/ '18

கௌரவ மஹிந்தானந்த அழுத்கமகே,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கண்டி மாவட்டத்தின், கம்பளை - தொலொஸ்பாகே வீதியை இரு ஓடு பாதைகளாக விரிவாக்கும் பொருட்டு 2012 ஆம் ஆண்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது குருந்துவத்தை தொடக்கம் வெலிகந்த வரையிலான 7 கிலோமீட்டர் தூரம் காப்பற் இடப்பட்டு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) 2015 ஜனவரி தொடக்கம் மூன்றரை வருட காலப்பகுதியில் இந்த வீதியில் எதுவித வேலைகளும் இடம்பெறவில்லை என்பதையும்;

ஏற்றுக் கொள்வாரா?

(ஆ) பெருமளவிலான வாகனங்களும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்துகின்ற இந்த வீதியில் 4 கிலோமீட்டர்களுக்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வேலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-25

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks