04

E   |   සි   |  

 திகதி: 2011-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0779/2011: Ladies work abroad as housemaids and in Garment Factories

0779/’10 கெளரவ அனோமா கமகே,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாகவும் ஆடைக்கைத்தொழிற்சாலை ஊழியர்களாகவும் பணிபுரியும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (ii) இவர்களில் பல்வேறுபட்ட சித்திரவதைகளுக்குட்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (iii) மேற்படி காரணங்களால் மீண்டும் நாடு திரும்பியுள்ளவர்களினதும் இன்னமுமே வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களினதும் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும், (iv) சித்திரவதைக்குட்பட்டு வெளிநாடுகளில் தங்கியுள்ள பெண்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (ஆ) (i) சித்திரவதைக்குட்பட்ட காரணத்தினால் மீண்டும் நாடு திரும்பியுள்ள பெண்களில் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (ii) இவ்வகையில் செலுத்தப்பட்ட முழுப்பணத் தொகை எவ்வளவென்பதையும், (iii) சித்திரவதைக்குட்பட்டு, இன்னமுமே வெளிநாடுகளில் தங்கியிருக்கும், மற்றும் நாடு திரும்பியுள்ள பெண்களின் சார்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks