04

E   |   සි   |  

 திகதி: 2019-03-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0586/2019: Proposals 209- Budget 2016

586/ '19

​கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 209 இன் பிரகாரம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக செல்கின்ற கடல் மார்க்கத்தை வருடாந்தம் 4,500 எண்ணெய்க் கப்பல்கள் உட்பட 35,0000 கப்பல்கள் பயன்படுத்துவதாக குறிப்பிட்டு, ஆழ்கடலில் எண்ணெய் வழங்கும் பணியில் பிரவேசிப்பதற்கு தனியார் துறையினர் ஊக்குவிக்கப்படுமென முன்மொழியப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி முன்மொழிவை நடைமுறையில் யதார்த்தமாக்க இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி முன்மொழிவின் பிரகாரம், மேற்படி பணிக்கான உரிமப்பத்திரம் வழங்க வௌிப்படைத் தன்மையுடன்கூடிய விலை கேட்பு முறையியலொன்று பின்பற்றப்பட்டதா என்பதையும்;

(iv) அதன் பிரகாரம், ஆழ்கடலில் எண்ணெய் வழங்க உரிமப்பத்திரம் பெற்றுக்கொண்ட தரப்பினர்கள் யாரென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-15

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks