04

E   |   සි   |  

 திகதி: 2019-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0581/2019: தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம்: செலவிடப்பட்ட பணம்

581/ '19

கெளரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 வரவு செலவுத்திட்டத்தின் 174 ஆம் முன்மொழிவின் பிரகாரம், தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேலதிக நிகழ்ச்சித்திட்டங் களுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 2000 மில்லியன் நிதி ஏற்பாடு 2016 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட முறையை தெளிவுபடுத்துவாரா என்பதையும்;

(ii) மேற்படி முன்மொழிவின் பிரகாரம், நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்ட "மேலதிக நிகழ்ச்சித்திட்டங்கள்" யாவை என்பதையும்;

(iii) மேற்படி மேலதிக நிகழ்ச்சித்திட்டங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டில்,

(i) சுற்றாடல் சமநிலைமை பாதுகாத்தல்;

(ii) நிலைபேறான காணி முகாமைத்துவம்;

(iii) உயிர் வளங்களின் பாதுகாப்பு;

(iv) சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்தல்;

(v) வன வளங்களின் பாதுகாப்பு;

ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட பணத் தொகைகள் தனித்தனியே யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-08

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-23

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks