பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
566/ '19
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பண்டாரகம பிரதேச செயலகப் பிரிவினால் பண்டாரகம நகரத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலையமொன்று நடாத்தி வந்த இடத்தில் குத்தகைக்கு விடுவதற்கு கடை அறைகள் அமைக்கப்பட்டனவா என்பதையும்;
(ii) ஆமெனில், அமைக்கப்பட்ட கடை அறைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும் நிதி வழங்கியவர்கள் யாரென்பதையும்;
(iv) மேற்படி கடை அறைகள் குத்தகைக்கு விடுவதற்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஒவ்வொரு கடை அறைக்காகவும் கேள்விப்பத்திரம் முன்வைத்தவர்களின் பெயர், முகவரி கடை அறையின் இலக்கம் மற்றும் முன்வைக்கப்பட்ட விலை ஆகியவற்றை வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி கேள்விப் பத்திரம் கோரல் பற்றி மக்களை அறிவூட்ட,
(i) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்;
(ii) அறிவித்தல் வௌியிடப்பட்ட ஒவ்வொரு பத்திரிகை, அறிவித்தல் இடப்பட்ட திகதி, மற்றும் அறிவித்தல்களின் எண்ணிக்கை;
(iii) விளம்பரப் பதாதை, அல்லது அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப் பட்டிருப்பின், அவ்விடங்கள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி விளம்பரங்களின் பிரதிகளை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(ii) மேற்படி கேள்விப்பத்திரக் கோரலுக்கு போதுமான அளவு கேள்விப்பத்திர தாரர்கள் இருக்கவில்லையென ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) இச் சிக்கலை தீர்த்துக்கொள்ள மேற்படி கடை அறைகளுக்காக மீண்டும் கேள்விப்பத்திரம் கோருவதற்கு சிபாரிசு செய்வாரா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-28
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-06-06
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks