04

E   |   සි   |  

 திகதி: 2019-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0564/2019: குருணாகல் போதனா மருத்துவ மனை தலசீமியா நோய்த் தடுப்புப் பிரிவு: மனித மற்றும் பெளதிக வளங்கள்

564/ '19

கெளரவ துஷார இந்துனில் அமரசேன,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் வடமேல் மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலசீமியா நோயாளிகள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டிப்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) அந்த நோளிகளுக்கென குருணாகல் போதனா மருத்துவ மனையின் தேசிய தலசீமியா நிலையத்தின் தலசீமியா நோய்த் தடுப்புப் பிரிவினால் பாரிய சேவை வழங்கப்படுவதை அறிவாரா என்பதையும்;

(iii) எவ்வாறாயினும், அந்த பிரிவுக்குத் தேவையான மனித வளம் மற்றும் வாகனங்கள் உட்பட பிற பெளதிக வளங்கள் போதியளவு கிடைக்காததை அறிவாரா என்பதையும்;

(iv) மேற்படி பிரிவுக்குத் தேவையான பெளதிக மற்றும் மனித வளத்தைப் பெற்றுக்கொடுக்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-11

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks