04

E   |   සි   |  

 திகதி: 2019-03-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

0549/2019: கிளி/ கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்: மனித மற்றும் பெளதீக வளப் பற்றாக்குறை

549/ '19

கௌரவ சி. சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில், கரச்சி பிரதேச செயலாளர் பிரிவில் கிளி/ கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் எனும் பெயரில் தேசிய பாடசாலையொன்றுள்ளது என்பதையும்;

(ii) கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகள் இரண்டில் ஒன்றாகிய இப்பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை, பணியாட்டொகுதி உறுப்பினர்களின் பற்றாக்குறை, மேசை கதிரைகளின் பற்றாக்குறை மற்றும் ஏனைய வளங்களின் பற்றாக்குறையுடன் இப்பாடசாலையானது செயற்படுகின்றது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா பணியாட்டொகுதியினரின் பெயர்கள் என்னவென்பதையும்;

(ii) இப்பாடசாலையில் நிலவும் கல்விசாரா பணியாட்டொகுதியினரின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்னவென்பதையும்;

(iii) இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்ற முடியாது என்பதை ஏற்றுக்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இப்பாடசாலையின் கட்டடத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாது;

(ii) மேசை கதிரைகளின் பற்றாக்குறை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் திகதி யாது;

(iii) இப்பாடசாலைப் பணியாட்டொகுதியினரின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் திகதி யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-16

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-16

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks