04

E   |   සි   |  

 திகதி: 2019-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0548/2019: கிளி/ முழங்காவில் மகா வித்தியாலயம்: குறைபாடு‍கள்

548/'19

கௌரவ எஸ். சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கிளி/முழங்காவில் மகா வித்தியாலயம் என்ற பெயரில் தேசிய பாடசாலையொன்று இருக்கின்றதென்பதையும்;

(ii) கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற இரண்டு தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, பதவியணி பற்றாக்குறை, மேசை கதிரை தட்டுப்பாடு மற்றும் வேறு வளக் குறைபாடுகளைக் கொண்ட பாடசாலையாக கிளி/முழங்காவில் மகா வித்தியாலயம் காணப்படுகின்றது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்தின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா பணியாட்டொகுதியினரின் பெயர்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி பாடசாலையில் நிலவுகின்ற சிற்றூழியர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iii) இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமையின் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த முடியுமாவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இந்தப் பாடசாலையின் கட்டிடத் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் தினம் யாதென்பதையும்;

(ii) கதிரைகள் மற்றும் மேசைகளின் தட்டுப்பாட்டினைப் பூர்த்தி செய்யும் திகதி யாதென்பதையும்;

(iii) இப்பாடசாலையின் பதவியணியினர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் தினம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-11

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks