பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
536/ '19
கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய லொத்தர் சபையினால் மஹஜன சம்பத 'ரஜ தினும' எனும் பெயரில் லொத்தர் சீட்டிழுப்பொன்று நடத்தப்படுகின்றதென்பதையும்;
(ii) மேற்படி லொத்தரின் 3328 வது சீட்டிழுப்பின் மூலமாக புத்தம்புதிய ஹைபிரிட் மோட்டார் வாகனமொன்று வழங்கப்படுவதாக தேசிய லொத்தர் சபையினால் பிரச்சார அறிவித்தலொன்று வெளியிடப்பட்டதென்பதையும்;
(iii) மேற்படி சீட்டிழுப்பில் உடுதும்பற, மடுகல்ல, கலமுனவில் வதியும் திரு. கே.டபிள்யு.ஜீ.பீ. கப்புகொட்டுவ மோட்டார் வாகனத்தை வென்றெடுத்தார் என்பதையும்;
(iv) மேற்படி மோட்டார் வாகனம் 2017.01.25 ஆம் திகதி இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபன வளவில் வைத்து திரு. கப்புகொட்டுவவுக்கு கையளிக்கப் பட்டதென்பதையும்;
(v) வாகனத்தின் பதிவுச்சான்றிதழை பரிசீலிக்கையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது புதிய (Brand New) மோட்டார் வாகனமல்லவென்பதையும் பாவித்து பழுதுபார்க்கப்பட்ட (Reconditioned) மோட்டார் வாகனமென்பதையும்;
(vi) இது சம்பந்தமாக தேசிய லொத்தர் சபைக்கு முறைப்பாடு செய்தபோதிலும் எவ்விதமான பதிலும் வழங்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இது சம்பந்தமாக விசாரணையொன்றை மேற்கொண்டு இந்த மோசடியை புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;
(ii) திரு. கப்புகொட்டுவவுக்கு புதிய மோட்டார் வாகனமொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா;
(iii) ஆமெனில் அத்திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-22
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-06-04
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks