E   |   සි   |  

 திகதி: 2019-03-14   பதிலளிக்கப்பட்டவைகள் 

0533/2019: உளவள மதியுரை ஆசிரியர்கள்: நியமனங்கள்

533/ '19

கௌரவ பிமல் ரத்நாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உளவள மதியுரை தொடர்பில் முறைசார்ந்த பயிற்சியுடன் கூடிய 2753 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக 2017 சனவரி மாதத்தில் இலத்தரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வௌியிடப்பட்டன என்பதையும்;

(ii) 2017.08.11 ஆம் திகதி காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் இதனை உறுதிப்படுத்தி கூற்றொன்றை விடுத்துள்ளார் என்பதையும்;

(iii) தற்போது மெய்யியல் மற்றும் உளவியல் கற்கின்ற பெரும் எண்ணிக்கையிலான பட்டதாரிகள் தொழில்வாய்ப்பற்று உள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஊடக அறிக்கைகளின் பிரகாரம் 2753 உளவள மதியுரை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-14

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-03-14

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks