பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
517/ '19
கெளரவ இந்திக அநுருத்த ஹேரத்,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018 ஆம் ஆண்டின் முதலாவது போகத்தின் போது மேல் மாகாணத்தில் பயிர் செய்யப்பட்ட மொத்த வயற் காணிகளின் அளவு ஹெக்ரயார்களில் எவ்வளவு என்பதையும்;
(ii) மேல் மாகாணத்தில் பயிர் செய்யாது தரிசுநிலமாக உள்ள வயற் காணிகளின் அளவு ஹெக்ரயார்களில் எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி பயிர் செய்யப்படாத தரிசுநிலமாகவுள்ள வயல்களினால் நாடு இழந்துள்ள நெல் மெற்றிக் தொன்கள் எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) பயிர் செய்யப்பட்ட போதிலும் சேதமடைந்த வயலின் அளவு ஹெக்ரயார்களில் எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி சேதங்கள் மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு/குறைப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) பயிர்செய்கை சேதமடைந்ததன் காரணமாக அநாதரவாகியுள்ள கமக்காரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) பயிர் செய்யப்படாத வயல்களை வேறு பொருளாதார நடவடிக்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள அங்கீகாரம் வழங்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அது பற்றிய சாத்தியக்கூறுக் கற்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) மேற்படி கற்கையின் உள்ளடக்கம் யாது என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-07
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-08-06
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks