04

E   |   සි   |  

 திகதி: 2019-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0468/2019: உள்நாட்டு விமானப் பயண வசதிகளை அபிவிருத்தி செய்தல்: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

468/ '19

கெளரவ ஆனந்த அளுத்கமகே,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) தற்போது இலங்கையில் காணப்படுகின்ற,

(i) உள்நாட்டு விமான நிலையங்களின் எண்ணிக்கை;

(ii) உள்நாட்டு விமான நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்;

(iii) உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற விமானங்களின் எண்ணிக்கை;

தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த திகதி முதல் இதுவரை உள்நாட்டு விமானப் பயண வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) சுற்றுலாத்துறை மீதான ஈர்ப்பை மேம்படுத்துவதற்கு மற்றும் அவ்வாறான ஈர்ப்பைக் கொண்ட இடங்களுக்கு இலகுவாக பிரவேசிப்பதற்குக் கேபல் கார்களைப் பயன்டுத்துவதை வெளிநாடுகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளதனால் இலங்கையிலும் அவ்வாறான,

(i) கேபல்கார் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான ஆற்றல் உள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறான கார்களை பயன்படுத்தக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி இடங்கள் யாவை என்பதையும்;

(iv) இந்த கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-07

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-06-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks