பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜயந்த சமரவீர,— அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 2018.06.30 ஆம் திகதியில் குத்தகை அடிப்படையில் வெளியாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள, மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான காணிகளின் பரப்பளவு யாதென்பதையும்;
(ii) அவை வழங்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களது பெயர், முகவரி, வழங்கப்பட்டுள்ள குத்தகைக் காலம், குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணியின் அளவு மற்றும் குத்தகைப் பணத்தொகை ஆகியவை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) இக்காணிகளை குத்தகைக்கு வழங்குகையில், பகிரங்க சந்தை விலைகளுக்கு ஏற்ப சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, இதற்கேற்ப குத்தகைப் பணம் அறவிடப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) காணியை குத்தகைக்குப் பெற்ற நபர்கள், அவற்றை துணை குத்தகைக்கு வழங்கியிருப்பார்களேயாயின், அக்காணிகள் யாவை என்பதையும்;
(ii) அவ்வாறு துணை குத்தகைக்கு வழங்கியவர்களின் பெயர், முகவரி, குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காலம், காணியின் அளவு மற்றும் குத்தகைப் பணத்தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) குத்தகை அறவீடானது இற்றைப்படுத்தப்படாமையாலும் சட்டவிரோத துணை குத்தகைக்கு வழங்கல் காரணமாகவும் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் சபை இழந்துள்ள நிதித்தொகை யாதென்பதையும்;
(iv) குத்தகை ஒப்பந்தத்தின் பிரகாரம் துணை குத்தகைக்கு வழங்கலுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைககள் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-06
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks