04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0434/2019: Milk Feeding event at Elephant Orphanage Pinnawala

434/ '19

கௌரவ கனக ஹேரத்.— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பின்னவல யானைகள் சரணாலயத்தை பார்வையிடுவதற்காக ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதருகிறார்கள் என்பதையும், இந்த நிறுவனத்தினால் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்துக்கு அதிகூடிய வருமானம் கிடைக்கப்பெறுகிறது என்பதையும் அவர் அறிவாரா;

(ii) 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் பின்னவல யானைகள் சரணாலயத்தைப் பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டின்படி வெவ்வேறாக யாது;

(iii) 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் ஒவ்வொரு வருடத்துக்கும் காலாண்டுக்கும் வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பின்னவல யானைகள் சரணாலயத்தைப் பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு, யானைக் குட்டிகளுக்கு பால் ஊட்டுவதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பு தற்போது நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணம் யாது;

(ii) இதன் காரணமாக நிறுவனத்துக்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் யாது;

(iii) இலங்கைக்கு பெறுமதிமிக்க ஒரு வளமாகக் காணப்படும் பின்னவல யானைகள் சரணாலயத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதா;

(iv) ஆமெனில், குறிப்பிட்ட நடவடிக்கை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-10

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks