04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0427/2019: Pepper cultivation and export and import 2015 - 2018

427/ '19

கௌரவ கனக ஹேரத்,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் மிளகு பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் பரப்பளவு யாதென்பதையும்;

(ii) 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை நாட்டின் மிளகு விளைச்சல் ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iii) 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஏற்றுமதி செய்துள்ள மிளகின் அளவு ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iv) இந்த நாட்டில் உற்பத்தி செய்துள்ள மிளகின் அளவிற்கும் அதிகமான அளவு மேற்படி ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், இலங்கை மிளகு இறக்குமதி செய்யப்படுகின்றதா என்பதையும்;

(vi) இலங்கை மிளகு இறக்குமதி செய்கின்ற நாடுகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கைக்கு மிளகு இறக்குமதி செய்வதால் இந்நாட்டு மிளகு செய்கை அழிவடைவதோடு அப்பாவி மிளகு செய்கையாளர்களுக்கு அநீதி ஏற்படுத்தி உயர் மட்ட வர்த்தகர்கள் சிலருக்கு மாத்திரம் நன்மை ஏற்படுகின்றதென்பதையும்;

(ii) மிளகு கைத்தொழிலை மீண்டும் மேம்படுத்த ஏதேனும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

(iii) ஆமெனில், அது யாதென்பதையும்;

(iv) மேற்படி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-07

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks