04

E   |   සි   |  

 திகதி: 2019-05-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0426/2019: Payment of compensation to Mr. Anthony Jesudasan who was killed by a Navy Boat

426/ '19

கௌரவ சி. சிறீதரன்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பேதுருதுடுவ பிரிவின் எழுவைதீவு பகுதியின் நான்காம் வலயத்தில் வசித்தவரும் ஆறு பெண் பிள்ளைகளின் தகப்பனுமாகிய அன்ரணி ஜேசுதாசன் 2014.12.19 அன்று எழுவை தீவினை சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பினுள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்படையின் டோரா படகின் தாக்குதலின் விளைவாக கொல்லப்பட்டார் என்பதனையும்;

(ii) திரு. ஜேசுதாசனின் மரணத்திற்கான நஷ்டஈட்டினை அநாதரவாகியுள்ள அவரது பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு உடனடியான ஆயத்தங்களை செய்வதாக கடற்படை வாக்குறுதியளித்ததென்பதனையும்;

(iii) அவரது மரணம் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதனையும்;

(iv) திரு. ஜேசுதாசனின் மரணத்திற்கான நீதி கோரி நான்கு வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கொன்று பதிவுசெய்யப்பட்டதென்பதனையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆமெனில், மேற்குறிப்பிட்ட வழக்கைத் தொடர்ந்தவர் யாரென்பதையும், நீதிமன்றம் எதுவென்பதனையும்;

(ii) வழக்கு இலக்கம் என்னவென்பதனையும்;

(iii) நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடரப்பட்ட போதிலும் தற்போது வரைக்கும் நஷ்டஈடு ஏன் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம் என்னவென்பதனையும்;

(iv) பெற்றோரை இழந்த அப்பிள்ளைகளின் தந்தையாரின் மரணத்திற்கு உரிய முறையிலான நஷ்டஈடு எப்போது வழங்கப்படுமென்பதனையும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-09

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks