04

E   |   සි   |  

 திகதி: 2019-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0393/2019: Local Government Bodies to which gully bowsers, tractors water bowsers given by the Ministry

393/ '18

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் நாட்டில் காணப்படுகின்ற மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகளின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

(ii) மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படவுள்ள நகரசபைகள் யாவை என்பதையும்;

(iii) நகர சபைகளாக தரமுயர்த்தப்படவுள்ள பிரதேச சபைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2010 ஆண்டு தொடக்கம் 2018 மே வரையான காலத்தில் அமைச்சினால் டிராக்டர், கலிபவுசர், தண்ணீர் பவுசர் முதலிய பல்வேறு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் பெயர்கள், வழங்கப்பட்ட உபகரணங்கள், அவை பெற்றுக்கொடுக்கப்பட்ட திகதிகள் தனித்தனியே யாவை என்பதையும்;

(ii) எதிர்காலத்தில் இவ்வாறான இயந்திர உபகரணங்கள் உள்ளிட்ட கருவிகள் பெற்றுக்கொடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் இனங்காணப்பட்டிருப்பின், அவை யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks