பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
392/ '18
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே.— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை மாவட்டத்துக்கு உரித்தான குறைந்தளவான வசதிகளைக் கொண்ட கஷ்டப் பிரதேசமான பதவி ஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளில், மஹிந்தோதய ஆய்வுகூடமொன்று காணப்பட்ட ஒரேயொரு பாடசாலை திருகோணமலை / வடக்கு வலத்தியத்தின் பதவி பளுகஹவங்குவ மகா வித்தியாலயம் என்பதையும்;
(ii) மேற்படி கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மஹிந்தோதய ஆய்வுகூம் 2014.11.08 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீப்பற்றலினால் அழிவடைந்துள்ளது என்பதையும்;
(iii) 2017.09.14 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இதன் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.54 இலட்சம் பணத்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஆய்வுகூடம் தீக்கிரையாகி தற்போது சுமார் 3 1/2 வருடங்கள் கடந்துள்ள போதிலும் நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாமற் போனமைக்கான காரணங்கள் யாவை;
(ii) புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், இதுவரையில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமைக்கான காரணம் யாது;
(iii) மேற்படி அ(iii) இல் குறிப்பிடப்பட்ட ஒதுக்கங்களுக்கு என்ன நடந்துள்ளது;
(iv) நவீனமயப்படுத்தல் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-08
கேட்டவர்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-05-22
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks