04

E   |   සි   |  

 திகதி: 2019-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0354/2019: Police complaint on 248/177/MOIB dated 2017.02.13

354/ '18

கெளரவ மொஹம்மது நசீர்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கம்பஹா பொலிஸ் நிலையத்தின் 248/177/MOIB ஆம் இலக்க மற்றும் 2017.02.13 ஆம் திகதிய முறைப்பாடு தொடர்பிலான சந்தேக நபருடன், EP-JA-7555 ஆம் இலக்க Toyota Noah வகையிலான மோட்டார் வாகனம், Samsung வகையிலான இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், Nokia வகையிலான ஒரு கையடக்கத் தொலைபேசி, தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிபத்திரங்கள் சில மற்றும் பணம் அடங்கிய பயணப் பொதியொன்று சிவில் பிரசைகள் சிலரினால் 2017.05.01 ஆம் திகதி களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாக மேற்படி சந்தேக நபர் 2017.05.01 ஆம் திகதி முதல் 2017.05.06 ஆம் திகதி வரை பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்பதையும்;

(iii) மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்துமாறு அப்போதைய சட்டமும், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் MLO/MO/OUT/147/17 ஆம் இலக்க 2017.08.29 ஆம் திகதிய கடிதம் மூலம் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றம் யாது என்பதையும்;

(ii) பாதிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டாளர்களான தரப்பினருக்கு நியாயம் வழங்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-22

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks