04

E   |   සි   |  

 திகதி: 2019-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0349/2019: Quazi Judges

349/ '18

கௌரவ முஹம்மது நசீர்,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் நாடாளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள காதி நீதிமன்ற வலயங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி வலையங்களிலுள்ள காதி நீதிபதிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு காதி நீதிபதியும் நியமிக்கப்பட்ட திகதி மற்றும் நியமனக் காலம் நிறைவுபெறும் திகதி யாதென்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு காதி நீதிபதியினதும் கல்வி, தொழில்சார் மற்றும் ஏனைய தகைமைகள் யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி சட்டத்தின் கீழ் காதி நீதிபதிகளை நியமிக்கும்போது பரிசீலனை செய்யப்படும் கல்வி, தொழில்சார் மற்றும் ஏனைய தகைமைகள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-05

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks