பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
321/ '18
கெளரவ இஷாக் ரஹுமான்,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012 ஆம் ஆண்டு பலாகல பிரதேச செயலாளர் பிரிவில், பலாகல-நேகம்பஹ வீதியில் ஆரம்பிக்கப்பட்ட "விஜயகம" படைவீரர் கிராமம் 2013 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) மேற்படி கிராமத்தில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுவதன் காரணமாக கிராமத்தில் வசிப்பவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கூட மிகவும் அபாயகரமான நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;
(iii) மேற்படி கிராமத்தைச் சுற்றி யானை வேலியொன்றை நிர்மாணிக்க பிரேரிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கிராமவாசிகளின் பாதுகாப்புக்காக துரிதமாக யானை வேலியொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-05
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks