E   |   සි   |  

 திகதி: 2019-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0197/2019: Ambassadors appointed to USA, UK, Australia, Japan, France, China, India and Switzerland

197/ '18

கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஐக்கிய அமெரிக்கா, பெரிய பிரித்தானியா, அவுஸ்திரேலியா, யப்பான், பிரான்ஸ், சீனா, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்காக 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அல்லது உயர்ஸ்தானிகர்கள் யாவர் என்பதையும்;

(ii) இவர்களில் இலங்கை வெளிநாட்டு சேவையில் இடம்பெறும் மற்றும் வெளிநாட்டு சேவையில் இடம்பெறாத அலுவலர்கள் தனித்தனியே யாவர் என்பதையும்;

(iii) நியமனம் செய்யப்பட்ட திகதியளவில் வெளிநாட்டு சேவையில் இடம்பெறும் அலுவலர்கள் இலங்கை வெளிநாட்டு சேவையில் பெற்றிருந்த அனுபவம் மற்றும் கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;

(iv) நியமனம் செய்யப்பட்ட திகதியளவில் வெளிநாட்டு சேவையில் இடம்பெறாத அலுவலர்கள் கொண்டிருந்த கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks