logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-11-29   பதிலளிக்கப்பட்டவைகள் 

0731/2010: Tax Officer's Exam

0731/ ’10

கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் III ஆம் வகுப்பு, IIஆம் தரத்திற்கான, வரி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை, 2006 ஆம் ஆண்டில் நடைபெற்றது என்பதையும்,

(ii) மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய 16,000 விண்ணப்பதாரிகளில் ஏறத்தாழ 1,000 போர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர் என்பதையும்,

(iii) இவர்களில் 550 பேருக்கு, 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 01 ஆம் திகதி தொடக்கம் நியமனம் வழங்கப்பட்டது என்பதையும்,

(iv) மேற்படி நியமனம் பெற்றவர்களிடையே, இப்பரீட்சை தொடர்பாக, 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியன்று பட்டப்படிப்புச் சான்றிதழைக் கொண்டிராதவர்களும் உள்ளனர் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) வரி உத்தியோகத்தர்களுக்காக நியமனம் பெற்ற மேற்படி ஒவ்வொரு வேட்பாளரினதும் பெயர், விலாசம் மற்றும் பெற்ற புள்ளிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்,

(ii) 2006.12.08 ஆம் திகதி முற்பகல் 9.30 க்கு, நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய, ஜா - எல கிழக்கு, துடல்ல, 76/சீ எனும் இலக்கத்தில் வசிக்கும், திருமதி டபிள்யு.ஏ.எஸ்.எம். சொவிஸ் இப்பரீட்சையிலும் நேர்முகப் பரீட்சையிலும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-11-29

கேட்டவர்

கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks