01

E   |   සි   |  

 திகதி: 2019-03-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0079/2019: கோழி இறைச்சி உற்பத்தி: விபரம்

79/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இந்நாட்டின் மாதாந்த நுகர்வுக்கு அவசியமான கோழி இறைச்சியின் அளவு யாது;

(ii) இந் நாட்டின் மாதாந்த கோழி இறைச்சி உற்பத்தி எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கைக்கு கோழி இறைச்சி எந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது;

(ii) மாதாந்தம் இறக்குமதி செய்யப்படுகின்ற கோழி இறைச்சியின் அளவு யாது;

(iii) இலங்கையிலிருந்து கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் யாவை;

(iv) மாதாந்தம் ஏற்றுமதி செய்யப்படுகின்ற கோழி இறைச்சியின் அளவு யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இறைச்சி உற்பத்தி செய்கின்ற கோழிப் பண்ணைகள் அதிகமாக வியாபித்துள்ள பிரதேசங்கள் யாவை;

(ii) ஒரு கிலோ கோழி இறைச்சியின் உற்பத்திக் கிரயம் எவ்வளவு;

(iii) தற்போது சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சிக்கான மொத்த விலை எவ்வளவு;

(iv) கோழி இறைச்சி உற்பத்தி மற்றும் விற்பனைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-15

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-06-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks