01

E   |   සි   |  

 திகதி: 2019-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0076/2019: 2018 மே மாதம் இடம்பெற்ற திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள்: இழப்பீடு

76/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2018 மே மாதம் இடம்பெற்ற திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின் அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய தொகை எவ்வளவென்பதையும்;

(v) இழப்பீடாக செலுத்தப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

(vi) இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(vii) இற்றைவரையில் இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படாத குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(viii) இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை எவ்வளவென்பதையும்;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-06-04

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks