01

E   |   සි   |  

 திகதி: 2019-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0074/2019: ஜயசுதீர் ஜெயராம் உட்பட மூவரது கைது: விபரம்

74/ '18

கெளரவ தயாசிறி ஜயசேகர,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 நவம்பர் மாதத்தில் ஒரு தினம் கோலாலம்பூரை நோக்கிச் செல்லவிருந்த மலேசிய வர்த்தகர் ஜயசுதீர் ஜெயராம் உட்பட மூவர் இந்த நாட்டிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றதன் காரணமாக இலங்கைச் சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனரா?

(ii) அவ்வாறாயின், இவர்கள் கைதுசெய்யப்பட்டபோது இவர்களின் உடைமையிலிருந்த பணம் எவ்வளவு;

(iii) மேற்படி நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை யாது;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) கைதுசெய்யப்பட்ட நபர்கள், சம்பந்தப்பட்ட விசாரணைகள் முடிவடையுமுன்னர் கோலாலம்பூர் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனரா;

(ii) அவ்வாறாயின், அதற்கான அனுமதி யாரால் வழங்கப்பட்டது;

(iii) அது சம்பந்தப்பட்ட விசாரணைகள் மேற்படி நபர்கள் இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதா;

(iv) நிதி அமைச்சில் அது சம்பந்தப்பட்ட கோப்புகள் இன்றளவில் உள்ளனவா;

(v) கைப்பற்றப்பட்ட பணம் மீண்டும் குறித்த நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா;

(vi) இன்றேல், குறித்த பணம் இன்றளவில் வைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனம் யாது;

(vii) இந்த விசாரணையில் ஈடுபட்ட சுங்கப் பிரிவு அலுவலர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளதா;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-23

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks