04

E   |   සි   |  

 திகதி: 2019-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0066/2019: Archaeological places destroyed in Pugollagama Anuradhapura

66/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அனுராதபுர மாவட்டத்துக்கு சொந்தமான இப்பலோகம பிரதேச செயலகப் பிரிவுக்குரிய பூகொல்லாகம, பலும்கல பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் காணியொன்று பொறித்தொகுதிகளை கொண்டு அழிக்கப்படுகிறதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) இக்காணியில் புராதன அழிவுச் சின்னங்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;

(iv) மேற்படி அழிவுச் சின்னங்கள் எந்த காலத்துக்குரியதென ஊகிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) மேற்படி காணியின் உரிமையாளர்கள் யாவர் என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி நடவடிக்கைக்கு அனுமதி அளித்த உத்தியோகத்தர் யார் என்பதையும்;

(ii) மேற்படி நடவடிக்கைக்கு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) பொறித் தொகுதிகளை பயன்படுத்தி இத் தொல்லியல் காணியை அழிப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks