E   |   සි   |  

 திகதி: 2019-02-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0065/2019: பசுமாடு இறக்குமதி: விபரம்

65/'18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கைக்கு பசுமாடுகளை இறக்குமதி செய்கையில் ஒரு பசுமாட்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகை ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

(ii) மேலே (i) இல் குறிப்பிடப்படும் பசுமாடுகளை இறக்குமதி செய்கையில் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ள பணத்தொகை ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

(iii) இறக்குமதி செய்யப்பட்ட பசுமாடுகளில் பயன் பெற்றுக்கொள்ள முடியாத மற்றும் மரணித்துள்ள பசுமாடுகளின் எண்ணிக்கை யாது;

(iv) இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசுமாடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாது;

(v) தனிப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு விற்பனை செய்கையில் ஒரு பசு மாட்டுக்காக அறவிடப்பட்டுள்ள பணத்தொகை யாது;

(vi) பசுமாடுகளை வழங்குவதற்கான தனிப்பட்ட தொழில்முயற்சியாளர்களை தெரிவு செய்கையில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ள அளவுகோல்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-06

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-03-18

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks