04

E   |   සි   |  

 திகதி: 2019-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0064/2019: Prisoners in Death Row / or was pardoned

64/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளின் எண்ணிக்கை யாது;

(ii) 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பொது மன்னிப்புப் பெற்று விடுதலையான கைதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப யாது;

(iii) மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்ட காலப்பகுதியில் நடைமுறைப் படுத்தப்பட்ட, 4 அல்லது 8 வருட காலப்பகுதியை மீளாய்வு செய்வதன் மூலம், மரண தண்டனைக்கு உட்பட்டதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் செயன்முறை தற்போதும் நடைமுறையில் உள்ளதா என்பதையும்;

(iv) இல்லையெனில், இதற்கான காரணம் யாது என்பதையும்;

(v) மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்கையில், அவர்களையும்விட அதிக காலம் இத்தண்டைனையை அனுபவித்த நன்னடத்தை கொண்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;

(vi) ஆமெனில், இதற்கான காரணம் யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-05

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks