04

E   |   සි   |  

 திகதி: 2019-03-13   பதிலளிக்கப்பட்டவைகள் 

0017/2019: வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றோர் : விபரம்

17/ '18

கெளரவ ஹேஷா விதானகே,— தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2005 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை,

(i) வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ள பெண்களின் எண்ணிக்கை;

(ii) வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ள பெண்களில் தாய்மாரின் எண்ணிக்கை;

(iii) வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இலங்கைக்கு மீள வருகைதந்துள்ள மற்றும் உயிரிழந்துள்ள பெண்களின் எண்ணிக்கை;

ஒவ்வொரு வருட ரீதியாக தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பராயமடையாத பிள்ளைகள் உள்ள தாய்மார் வெளிநாடு செல்வதன் காரணமாக அவர்களின் பிள்ளைகளுக்கு பாதகமான தாக்கம் ஏற்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், பராயமடையாத பிள்ளைகள் உள்ள பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதைத் தடுக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-13

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks