04

E   |   සි   |  

 திகதி: 2019-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0015/2019: பட்டப்பின்படிப்புக்காக வெளிநாட்டு மாணவர்களை அனுமதித்தல்: வருமானம்

15/ '18

கௌரவ ஹேஷா விதானகே,— ​நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017 ஆம் ஆண்டில் ஆரம்பப் பட்டப் படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பை கற்பதற்காக இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) ஆரம்பப் பட்டப் படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பை கற்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படி மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பல்கலைக்கழம் மற்றும் பட்டப் படிப்பிற்கு ஏற்ப தனித்தனியே யாதென்பதையும்;

(iii) 2017 ஆம் ஆண்டில் மேலே குறிப்பிடப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப் பட்டமையால் கிடைத்த வருமானம் எவ்வளவென்பதையும்;

(iv) இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு மேலும் கூடுதலான வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-11

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks