logo

02

E   |   සි   |  

 திகதி: 2019-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0006/2019: Filling of Paddy Lands Ratnapura District

6/ '18

கௌரவ ஹேஷா விதானகே,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் வயல் காணிகளை மீட்பதற்கு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) எம்பிலிபிட்டிய, உடகம சந்திக்கு அருகாமையிலுள்ள வயல் காணியொன்று மீட்கப்பட்டுள்ளதென்பதோடு, பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) இதற்காக அனுமதி வழங்கப்பட்டிருப்பின், அதன் அடிப்படை யாது என்பதையும்;

(v) தற்போது மீட்கப்பட்டுள்ள இந்த வயல் காணியில் நிரப்பப்பட்டுள்ள மண்ணை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks