04

E   |   සි   |  

 திகதி: 2010-11-29   பதிலளிக்கப்பட்டவைகள் 

0708/2010: Korean Jobs for Sri Lankans

0708/ ’10

கெளரவ துனேஷ் கங்கந்த,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2005 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஓகத்து மாதம் வரையிலான காலப்பகுதியில் கொரிய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்திற்கும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,

(ii) மேற்படி தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு நபரொருவர் பின்பற்ற வேண்டிய செயல் நடைமுறைகள் யாவையென்பதையும்,

(iii) அத்தொழில்களுக்காக சென்ற ஆட்களின் எண்ணிக்கை மாவட்ட மட்டத்தில் வெவ்வோறக எவ்வளவென்பதையும்,

(iv) கொரிய தொழில் வாய்ப்புக்காக இருக்க வேண்டிய அடிப்படை தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்திற்கும் ஏற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொண்டுள்ள கொரிய தொழில்வாய்ப்பு விண்ணப்பதாரி ஒருவரின் பதிவு செல்லுபடியாகும் கால எல்லை யாதென்பதையும்,

(ii) மேற்படி பதிவு இரத்தான தொழில் வாய்ப்பு விண்ணப்பதாரி ஒருவர் கொரியாவில் தொழிலொன்றை பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவையென்பதையும்,

(iii) எதிர்காலத்தில் இதற்காக ஆட்களை தெரிவு செய்யும் போது ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் வாய்ப்பு விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-11-29

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks