01

E   |   සි   |  

 திகதி: 2010-12-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0698/2010: Grama Niladari Divisions in the Country

0698/ ’10

 

கெளரவ புத்திக பத்திரண,—  பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ)    தற்போது இலங்கையிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ)    (i)      கிராம உத்தியோகத்தர் பதவிகளில் வெற்றிடங்கள் நிலவும் பிரிவுகளில் பதில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவானது, அவர்களது முதல் நியமனத்தின் போது பெற்றுக்கொண்ட அடிப்படைச் சம்பளத்தின் 1/4 பகுதியாகும் என்பதையும்,

(ii) இந்த அடிப்படையில் பதில் கடமையாற்றும் கொடுப்பனவு செலுத்தப்படுவதன் காரணமாக 10 - 15 வருடங்களுக்கு முன்னர் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் மேற்படி கொடுப்பனவு மிகச் சொற்பமாதொரு பணத்தொகையாகும் என்பதனால், அவ்வாறான உத்தியோகத்தர்களுக்கு நிதி ரீதியில் அநீதி இழைக்கப்படுகின்றது என்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) அவ்வாறான உத்தியோகத்தர்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் அவர் நடவடிக்கையெடுப்பாரா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் திகதி எதுவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-12-03

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks