01

E   |   සි   |  

 திகதி: 2010-12-02   பதிலளிக்கப்பட்டவைகள் 

0696/2010: Drinking Water in Matra District

0696/ ’10

 

கெளரவ புத்திக பத்திரண,— நீர் வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்களுக்குக் குடிநீர் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பிட்டபெத்தர நீர்விநியோகத் திட்டத்தின் மூலம் நீர் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,

(ii) மேற்படி  நீர் விநியோகத் திட்டத்திற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த பணத்தொகை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) பிட்டபெத்தர நீர் விநியோகத் திட்டம் தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(இ) (i) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்,

(ii) மீண்டும் இந் நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

(iii) ஆமெனில், அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்,

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-12-02

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks