01

E   |   සි   |  

 திகதி: 2011-01-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0664/2011: Stores of Paddy --- Board

0664/ ’10 கெளரவ அனுர திஸாநாயக்க,— கமத் தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) ஆரம்ப காலத்தில் நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு உரித்தாயிருந்த, (i) களஞ்சிய சாலைகளின் எண்ணிக்கை எத்தனை; (ii) ஒவ்வொரு களஞ்சியசாலையினதும் அமைவிடம் யாது; (iii) மேற்படி களஞ்சியசாலைகளின் கொள்ளளவு தனித்தனியாக எவ்வளவு; (iv) ஒவ்வொரு களஞ்சியசாலையிலும் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை; (v) வாகனங்களின் எண்ணிக்கை எத்தனை; என்பதை அவர் குறிப்பிடுவாரா? (ஆ) தற்போது அரசாங்கத்துக்கு உரித்தாயுள்ள, (i) நெல் களஞ்சியசாலைகளின் எண்ணிக்கை எத்தனை; (ii) நெல் களஞ்சியசாலைளின் அமைவிடங்கள் யாவை; (iii) மேற்படி ஒவ்வொரு களஞ்சியசாலையினதும் கொள்ளளவு மற்றும் ஊழியர் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவு; (iv) நெல் கொள்வனவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்களின் வகைகள் மற்றும் எண்ணிக்கை யாது; என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (இ) கடந்த 5 வருடங்களில், (i) சிறுபோகம் மற்றும் பெரும்போகங்களின் போது ஒவ்வொரு களஞ்சியசாலையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்; (ii) நெல்லுக்கான கொள்வனவு விலை எவ்வளவென்பதையும்; (iii) நெல்லுக்கான விற்பனை விலை எவ்வளவென்பதையும்; (iv) மேற்கூறிய காலத்தினுள் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிலிருப்பில் அழிவடைந்த அளவு எவ்வளவென்பதையும்; அவர் குறிப்பிடுவாரா? (ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-18

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks