01

E   |   සි   |  

 திகதி: 2010-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0631/2010: Reaserch for oil in Sourthern Coast

0631/ ’10

கெளரவ அனுர திசாநாயக்க,—  பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      இலங்கையின் தெற்கு கரைகடந்த பிரதேசத்தில் உள்ள 02 வண்டல் படுக்கைகளில் எண்ணெய் வளம் இருப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறு என்னவென்பதையும்,

(ii) மேற்படி ஆய்வுகளின் எழுத்திலான தகவல்கள் / குறிப்புக்கள் இருப்பின் சமர்ப்பிப்பாரா என்பதையும்,

(iii) மேற்படி ஆய்வுகள் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய நிறுவனம் அல்லது பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் என்னவென்பதையும்,

(iv) அந்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தகவல்களின் பொறுப்புக்களை ஏற்கும் இலங்கை விஞ்ஞானிகள் இருக்கின்றார்களா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) இந்தத் தெற்குக் கரையின் பெற்றோலிய வளம் தொடர்பாக இந்தியா அல்லது வேறு ஏதேனும் நாடொன்றுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், அதை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்,

(iii) இன்றேல், எதிர்காலத்தில் இந்தியா அல்லது வேறு ஏதேனும் நாடொன்றுடன் உடன்படிக்கை கைச்சாத்திட அரசு தீர்மானித்துள்ளதா என்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-11-25

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks