04

E   |   සි   |  

 திகதி: 2010-11-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0625/2010: New Inventors

0625/ ’10

 

கெளரவ அசோக் அபேசிங்க,— தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    புத்தாக்குநர்கள் தமக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள்  தொடர்பாக இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக அவர் அறிவாரா?

(ஆ)    (i)     புத்தாக்குநர்களான வர்த்தகர் செனெவிரத்ன, விரிவுரையாளர் ரிச்சட் நிக்கபிட்டிய மற்றும் கே.டி.பெரேரா என்போர் தமது ஆக்கங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மேற்கொள்ளும் கூற்றுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்,

(ii) புத்தாக்குநர்கள், புத்தாக்குநர் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் சில உத்தியோகத்தர்கள் தொடர்பாக மேற்கொண்டுள்ள எழுத்துமூலமான முறைப்பாடு தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் குறிப்படுவாரா?

(இ) (i) புத்தாக்குநர் ஆணைக்குழுவின் தலைவரது தான்தோன்றித்தனமான  செயற்பாடுகள் தொடர்பாக முறையானதொரு விசாரணையை நடத்துமாறு ஆக்கங்களின் கொள்ளையடிப்புக்கு உள்ளான புத்தாக்குநர்கள் சனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரியுள்ளனர் என்பதையும்,

(ii) இந்த ஆணைக்குழுவுக்கு ஒருவருடத்திற்காக அரசாங்கம் வழங்கிய நிதி ஏற்பாடுகள் சிறியதொரு காலப்பகுதியினுள் செலவிடப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஈ) மேற்படி ஆணைக்குழுவின் கணக்காய்வு அறிக்கைகளை அவர் இச்சபைக்கு முன்வைப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-11-24

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks