04

E   |   සි   |  

 திகதி: 2010-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0605/2010: Landslide Investigations

0605/ ‘10

கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      2009 ஆம் ஆண்டில் தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மண்சரிவுகள் சம்பந்தமாக அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் ஆய்வுப் பணிகளுக்காக செலவு செய்துள்ள மொத்தத் தொகை  வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,

(ii) மேற்படி அமைப்பு மண்சரிவுகள் சம்பந்தமாக அரசாங்கத் துறையின் ஆய்வுப் பணிகளுக்காக நிதிசார் அறவீட்டினை மேற்கொள்கின்றதா என்பதையும்,

(iii) 2009 ஆம் ஆண்டில் மண்சரிவுகள் சம்பந்தமாக தனியார் துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதன் முலம் மேற்படி அமைப்பு ஈட்டியுள்ள மொத்த வருமானம் எவ்வளவென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மண்சரிவுகளினால் ஏற்படும் அழிவுகளை குறைப்பதற்கு அனர்த்த  வலயங்கள் சம்பந்தமான தரவுகளை சேகரிக்கின்ற கருத்திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றதா  என்பதையும்,

(ii) ஆமெனில், அது யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-20

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.

அமைச்சு

அனர்த்த முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks