04

E   |   සි   |  

 திகதி: 2018-07-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0574/2018: Aid to people with Kidney Disease Kurunegala District

574/ '18

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— வீ்டமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சிறுநீரக நோய் பரவி வருகின்ற குருநாகல் மாவட்டத்தில், சிறுநீரக நோயாளர்களுக்கு தமது மருந்துகளுக்காக அதிகளவு பணத்தை செலவிட நேரிட்டுள்ளதால், இவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும், இவர்களால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடுகளின் வேலைகளை நிறைவு செய்வதற்கும் அமைச்சு ஏதேனும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், உதவி பெற்ற ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய யாது என்பதையும்;

(iii) எதிர்வரும் காலத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மாவட்டம் பூராகவும் விஸ்தரிப்பதற்கு அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-18

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks