கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை (இதழ் I - பொதுக் கல்வி, இதழ் II - உயர்கல்வி மற்றும் இதழ் III - தொழிற்கல்வி)
(ii) 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.07.01 முதல் 2026.07.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(iii) 2026 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான தொலைதூர கற்கை நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றாடல் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண கமகே - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் றாஜபக்ஷ
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ கே.காதர் மஸ்தான்
சுகாதாரத் துறையில் ஆடை விதிமுறைகளில் உள்ள சிக்கல்கள்
கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
புற்றுநோயாளிகளுக்கு மருந்து பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள்
கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 ஜூலை 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“முஸ்லிம் தாதியர் உதவியாளர்கள் எதிர்கொள்ளும் ஆடை விதிமுறைச் சிக்கல்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1810 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-21
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதி – இலங்கை பாராளுமன்றத்தின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது கூட்டத்தொடர்கள் தொடர்பான தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(ii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத் - இரண்டு மனுக்கள் (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசஎக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் பேரழிவின் இழப்பீட்டுத் தொகை மற்றும் ஏனைய விபரங்கள்(ii) கௌரவ ரவி கருணாநாயக்கமின் உற்பத்தி, மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் பிற விபரங்கள்இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 118 - நிகழ்ச்சித்திட்டம் 02 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) சபையால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்புப் பிரேரணை“நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-19
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 35(1) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டத்தை அச்சட்டத்தின் 35(5) ஆம் பிரிவு(ii) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 36(1) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் மற்றும் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான சுயாதீன கணக்காய்வாளரின் அறிக்கை, அச்சட்டத்தின் 36(3) ஆம் பிரிவுபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் ஆண்டறிக்கை(ii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் ஆண்டறிக்கை(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் புகையிரதத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iv) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் ஆண்டறிக்கை(v) 2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள்அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - மூன்று மனுக்கள் (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா - இரண்டு மனுக்கள் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பாகசட்டமூலங்கள் சமர்ப்பணம் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக“ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)”எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்நிதிச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) சபையால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்அதனையடுத்து, 1718 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-18
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்2 : கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─ • 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXXI (31) ஆம் பகுதியையும்; மற்றும்• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் II (2) ஆம் பகுதி(ii) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டு, நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு மதிப்பீடுபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை(iii) 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை(iv) 2024 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை(v) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 202 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மே 19 ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(vi) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 141, 143, 144, 157அ, 168 மற்றும் 190 ஆம் பிரிவுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 17 ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(vii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை(viii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஆயுள்வேத துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(ix) 2016/2017 மற்றும் 2017/2018 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கடதாசிக் கம்பனியின் ஆண்டறிக்கைகள்(x) 2023/2024 ஆம் ஆண்டுக்கான பிசீசீ லங்கா லிமிடட்டின் ஆண்டறிக்கை(xi) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை(xii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை(xiii) 2024/2025 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் வருடாந்த அறிக்கை(xiv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தென் மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வடக்கு மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xvi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xvii) 2025 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை(xviii) 2025 ஆம் ஆண்டுக்கான உயர்நீதிமன்ற பதிவகத்தின் செயலாற்றுகை அறிக்கை(xix) 2025 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(xx) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள இரண்டு நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இரண்டு நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxiii) 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத் தொழிற்சாலைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(iii) கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ ரணசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(iv) பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) லக்மாலி ஹேமசந்திர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்ப குமார (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார - இரண்டு மனுக்கள் (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம (v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசநீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்த முன்மொழிவு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ ரவி கருணாநாயக்கநாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புகளிலுள்ள சிக்கல்கள்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்விவசாயிகளின் போராட்டம் மற்றும் நெற் செய்கையிலுள்ள இதர பிரச்சினைகள் தொடர்பாக 2026.06.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கானது(ii) நீதித்துறை (திருத்தம்) - 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதுஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன் (ii) ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடுஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“சுதேச மருத்துவப் பட்டதாரிகளை நியமிப்பதன் அவசியம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1820 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 19ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-07
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஜூலை 10 ஆம் திகதிய 2496/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iv) 2023 ஆம் ஆண்டுக்கான அசோஸியேடட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட்டின் வருடாந்த அறிக்கை(v) 2023 ஆம் ஆண்டுக்கான பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை(vi) 2024 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை(vii) 2025 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி (மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசஇலங்கையில் வாழ்க்கைச் செலவு உயர்வு, பணவீக்கம் மற்றும் வறுமைகௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் கொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணை விபரங்கள்கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்துறைமுக நகரம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2026.07.10 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் (i) 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தினைத் திருத்துவதற்காக“ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தம்)”எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-• பால் உற்பத்தியில் தன்னிறைவினை ஊக்குவித்தல்நாடு தற்போது பால் இறக்குமதியில் தங்கியிருப்பது கணிசமான அந்நியச் செலாவணி இழப்புக்கு இட்டுச்செல்வதாலும், சிறந்த இன மாடுகளுக்கான, கால்நடைச் சேவைகளுக்கான, தீவனத்துக்கான மற்றும் உட்கட்டமைப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் போன்ற பிரச்சினைகளுக்கு விவசாயிகள் முகங்கொடுப்பதாலும், மேலும், இச்சவால்களைத் தீர்ப்பது உணவுப் பாதுகாப்பினை அதிகரித்து, கிராமியத் தொழில்களை உருவாக்கி, இறக்குமதிகளில் தங்கியிருத்தலைக் குறைப்பதாலும், சிறந்த இன மாடுகளுக்கான அணுகல் மற்றும் கால்நடைச் சேவைகளை மேம்படுத்துவதன் மூலமும் தீவனப் பயிர்ச்செய்கையை விரிவாக்குவதன் மூலமும் விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பினை வலுப்படுத்துவதன் மூலமும் பாற் பண்ணை விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக்களை வழங்குவதன் மூலமும் அரச – தனியார் பங்காண்மைகளை ஊக்குவிப்பதன் மூலமும் பாலுற்பத்தி தொடர்பான ஆய்வினை ஊக்குவிப்பதன் மூலமும் பாலுற்பத்தியில் தன்னிறைவினை அடைவதற்காக அரசாங்கத்தினால் தேசிய பால் அபிவிருத்திக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் பாலுற்பத்தியாளர் குழுக்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட குழு இதன் அமுல்படுத்தலைக் கண்காணித்து, மேலதிக நடவடிக்கைகளை விதந்துரைக்க வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• கண்டல் தாவர சூழல்தொகுதியை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்சுற்றுச்சூழல் சமநிலைக்கும் கடற்றொழிலுக்கும் மிக முக்கியமானதாக அமையும் கண்டல் தாவர சூழல்தொகுதியைப் பாதுகாக்கும் பொருட்டு வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல்இலங்கையின் பழச் சந்தையில் இயற்கையாகப் பழுத்த பழங்களுக்குப் பதிலாக, இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி அவற்றை செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாலும், இறக்குமதி செய்யப்படும் பழங்களையும் இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாலும், இப்பழங்களை பிள்ளைகள் அதிகம் உட்கொள்வதாலும், நேர்மையற்ற வணிகர்கள் இலாபம் ஈட்டும் நோக்கத்தில் நாட்டின் எதிர்காலத்தை அழிவுக்குட்படுத்தி மேற்கொண்டுவரும் இச்செயற்பாட்டை நிறுத்துவதற்கு உரிய வழிமுறையொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• இலங்கையில் வன விலங்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு தேசியக் கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்தல்இலங்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் பல்வகைமை நிறைந்த ஒரு நாடாக கருதப்படுவதாலும், காடழிப்பு, மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக சட்ட விரோத வன விலங்கு வர்த்தகம், மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்குமிடையே அதிகரித்து வரும் மோதல்கள் காரணத்தினால் வருடாந்தம் வன விலங்குகளினதும் மனித உயிர்களினதும் இழப்பு பெருமளவில் இடம்பெறுவதாலும், புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் தேசிய வன விலங்குகள் முகாமைத்துவக் கொள்கையொன்றை வகுத்தல் நிலைபேறான அபிவிருத்தி நோக்கமாக இருப்பதாலும், அதன் மூலம் விலங்குகளின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்படல், மனிதனுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் குறைவடைதல் உள்ளடங்கலாக விவசாயிகளின் பொருளாதார நிலையும் சமூக வாழ்க்கைத் தரமும் மேம்படுவதாலும், அதன் பொருட்டு செயற்படுத்தக் கூடிய நடைமுறைச் சாத்தியமான நவீன கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்து செயற்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல் அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல்மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான புகையிரதப் பாதை மற்றும் மாத்தறையிலிருந்து கல்முனை வரையான புகையிரதப் பாதையை விஸ்தரிப்பதன் மூலம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பெருமளவிலான மக்களுக்கு பயன் கிடைப்பதனால், மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்தல்கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களின் எண்ணிக்கை, அவ்வாறு தகனம் செய்யப்பட்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள் போன்ற தகவல்களை விசாரிப்பதற்கும், இறந்தவர்களின் ஜனாஸாக்களை இவ்வாறு வலுக்கட்டாயமாகத் தகனம் செய்தமைக்கு ஏதுவான பின்னணி மற்றும் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படவர்களின் உறவினர்களின் மனநிலை தொடர்பாக விசாரணை செய்வதற்கும், இதற்கு உடந்தையாக இருந்து வழிகாட்டுதல் களுக்கு முரணாகச் செயற்பட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட அரசாங்க அலுவலர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கும், ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல்வட மாகாணம், கிழக்கு மாகாணம், மொனராகல மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டம் போன்ற பின்தங்கிய பிராந்தியங்கள் நீடித்து நிலவிய சிவில் முரண்பாடுகளின் தாக்கங்களாலும் வரலாற்று ரீதியான புறக்கணிப்புக்களாலும் தொடர்ந்தும் பல தசாப்தங்களாக கடுமையான பொருளாதார இழப்புக்களுக்கு முகங்கொடுத்து வருவதாலும்; தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இப்பின்தங்கிய பிராந்தியங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது பாரபட்சமான சுமைகள் திணிக்கப்பட்டுள்ளதால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளதாலும்; பொருளாதார ரீதியில் பின்னடைந்த இந்தப் பிரதேசங்களில் ஒப்புரவுமிக்க வளர்ச்சியையும், நிலைபெறுதகு அபிவிருத்தியையும் பால்நிலை வலுவூட்டலையும் மேம்படுத்தும் குறிக்கோளுடன் இக்கரிசனைக்குரிய விடயங்களை நிவர்த்தி செய்வதற்கென தனியானதொரு தேசிய முன்னெடுப்பினைத் தாபிப்பது அவசியமாக இருப்பதாலும்; 250 மில்லியன் டொலர் தொகையினை இலக்காகக் கொண்டு, 10+2 ஆண்டு காலப்பகுதியிலான நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்தும் இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளர்களிடமிருந்தும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும் மனிதாபிமானக் கொடையாளர்களிடமிருந்தும் கிடைக்கின்ற பங்களிப்புகளைத் திரட்டுவதற்கு ஒரு தேசிய அபிவிருத்தி நிதியத்தைத் தாபிப்பதற்கும்; அந்த நிதியினை விவசாயம், மீன்பிடி, மற்றும் குடிசைக் கைத்தொழில் என்பவற்றின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தைப் புத்துயிர்ப்பிப்பதற்கும், தொழில் வாய்ப்பையும் மற்றும் பெண்களின் சமூகப்-பொருளாதார ஊக்குவிப்பையும் மேம்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு வசதியை அபிவிருத்தி செய்வதற்கும், முடங்கிக் கிடக்கும் சொத்துக்களை செயலூக்கப்படுத்தி அவற்றை மீளப்பயன்படுத்துவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் (SME) மற்றும் கூட்டுறவுச்சங்கங்கள் ஆகியவற்றுக்கு உதவுவதற்கும், மீள்புதுப்பிக்கத்தகு சக்தியிலும் மற்றும் ஏனைய வணிக ரீதியில் சாத்தியமான கூட்டுத் தொழில்முயற்சிகளிலும் முதலிடுவதற்கும், திறன் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் மற்றும் இளைஞர் யுவதிகளுக்குக் கல்வி கற்பிக்கப் பயன்படுத்தவும்; உள்ளூர் திறனாற்றலை கட்டியெழுப்புவதற்காக முதலீடுகளிலுள்ள சாத்தியமான இடைவெளிகளை ஒழித்தல், நிதிகளின் பயனுள்ள மற்றும் வெளிப்படைத் தன்மைமிக்க பயன்பாடு ஆகியவற்றினை உறுதிப்படுத்தி, தொழில்நுட்ப உதவி வசதியைத் (TAF) தாபிக்க உதவுவதற்கும்; பொருளாதாரச் செயற்பாடுகளிலும் தீர்மானமெடுத்தல் விடயங்களிலும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு அளவிடக்கூடிய இலக்குகளைக் கொண்டு சகல முதலீட்டுத் துறைகளிலும் பால்நிலையின் உள்ளடக்கும்தன்மையினை உறுதிப்படுத்துவதற்கும்; இலங்கையின் பிரத்தியேகமான அபிவிருத்தி, நல்லிணக்கம், நிலைபெறுதகு அபிவிருத்தி என்பவற்றுக்கான ஒரு அவசர தேசிய நடவடிக்கையாக அந்த நிதியம் தாபிக்கப்படுவதைக் கருத்திற்கொள்வதன் மூலம் கருத்திட்டச் செயற்படுத்துகையில் ஒப்புரவுமிக்க பிராந்திய உள்ளடக்கம், வகைப்பொறுப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நிதியத்தை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் அந்தந்த அமைச்சுக்களுக்கும் மாகாண சபைகளுக்கும் உள்ளூர் அதிகாரசபைகளுக்கும் அதிகாரமளிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்கஅதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.