கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஜூலை 10 ஆம் திகதிய 2496/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான அசோஸியேடட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட்டின் வருடாந்த அறிக்கை
(v) 2023 ஆம் ஆண்டுக்கான பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2025 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் வாழ்க்கைச் செலவு உயர்வு, பணவீக்கம் மற்றும் வறுமை
கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் கொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணை விபரங்கள்
கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
துறைமுக நகரம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2026.07.10 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• பால் உற்பத்தியில் தன்னிறைவினை ஊக்குவித்தல்
நாடு தற்போது பால் இறக்குமதியில் தங்கியிருப்பது கணிசமான அந்நியச் செலாவணி இழப்புக்கு இட்டுச்செல்வதாலும், சிறந்த இன மாடுகளுக்கான, கால்நடைச் சேவைகளுக்கான, தீவனத்துக்கான மற்றும் உட்கட்டமைப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் போன்ற பிரச்சினைகளுக்கு விவசாயிகள் முகங்கொடுப்பதாலும், மேலும், இச்சவால்களைத் தீர்ப்பது உணவுப் பாதுகாப்பினை அதிகரித்து, கிராமியத் தொழில்களை உருவாக்கி, இறக்குமதிகளில் தங்கியிருத்தலைக் குறைப்பதாலும், சிறந்த இன மாடுகளுக்கான அணுகல் மற்றும் கால்நடைச் சேவைகளை மேம்படுத்துவதன் மூலமும் தீவனப் பயிர்ச்செய்கையை விரிவாக்குவதன் மூலமும் விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பினை வலுப்படுத்துவதன் மூலமும் பாற் பண்ணை விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக்களை வழங்குவதன் மூலமும் அரச – தனியார் பங்காண்மைகளை ஊக்குவிப்பதன் மூலமும் பாலுற்பத்தி தொடர்பான ஆய்வினை ஊக்குவிப்பதன் மூலமும் பாலுற்பத்தியில் தன்னிறைவினை அடைவதற்காக அரசாங்கத்தினால் தேசிய பால் அபிவிருத்திக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் பாலுற்பத்தியாளர் குழுக்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட குழு இதன் அமுல்படுத்தலைக் கண்காணித்து, மேலதிக நடவடிக்கைகளை விதந்துரைக்க வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• கண்டல் தாவர சூழல்தொகுதியை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
சுற்றுச்சூழல் சமநிலைக்கும் கடற்றொழிலுக்கும் மிக முக்கியமானதாக அமையும் கண்டல் தாவர சூழல்தொகுதியைப் பாதுகாக்கும் பொருட்டு வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல்
இலங்கையின் பழச் சந்தையில் இயற்கையாகப் பழுத்த பழங்களுக்குப் பதிலாக, இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி அவற்றை செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாலும், இறக்குமதி செய்யப்படும் பழங்களையும் இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாலும், இப்பழங்களை பிள்ளைகள் அதிகம் உட்கொள்வதாலும், நேர்மையற்ற வணிகர்கள் இலாபம் ஈட்டும் நோக்கத்தில் நாட்டின் எதிர்காலத்தை அழிவுக்குட்படுத்தி மேற்கொண்டுவரும் இச்செயற்பாட்டை நிறுத்துவதற்கு உரிய வழிமுறையொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இலங்கையில் வன விலங்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு தேசியக் கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்தல்
இலங்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் பல்வகைமை நிறைந்த ஒரு நாடாக கருதப்படுவதாலும், காடழிப்பு, மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக சட்ட விரோத வன விலங்கு வர்த்தகம், மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்குமிடையே அதிகரித்து வரும் மோதல்கள் காரணத்தினால் வருடாந்தம் வன விலங்குகளினதும் மனித உயிர்களினதும் இழப்பு பெருமளவில் இடம்பெறுவதாலும், புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் தேசிய வன விலங்குகள் முகாமைத்துவக் கொள்கையொன்றை வகுத்தல் நிலைபேறான அபிவிருத்தி நோக்கமாக இருப்பதாலும், அதன் மூலம் விலங்குகளின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்படல், மனிதனுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் குறைவடைதல் உள்ளடங்கலாக விவசாயிகளின் பொருளாதார நிலையும் சமூக வாழ்க்கைத் தரமும் மேம்படுவதாலும், அதன் பொருட்டு செயற்படுத்தக் கூடிய நடைமுறைச் சாத்தியமான நவீன கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்து செயற்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல் அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல்
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான புகையிரதப் பாதை மற்றும் மாத்தறையிலிருந்து கல்முனை வரையான புகையிரதப் பாதையை விஸ்தரிப்பதன் மூலம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பெருமளவிலான மக்களுக்கு பயன் கிடைப்பதனால், மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்தல்
கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களின் எண்ணிக்கை, அவ்வாறு தகனம் செய்யப்பட்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள் போன்ற தகவல்களை விசாரிப்பதற்கும், இறந்தவர்களின் ஜனாஸாக்களை இவ்வாறு வலுக்கட்டாயமாகத் தகனம் செய்தமைக்கு ஏதுவான பின்னணி மற்றும் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படவர்களின் உறவினர்களின் மனநிலை தொடர்பாக விசாரணை செய்வதற்கும், இதற்கு உடந்தையாக இருந்து வழிகாட்டுதல் களுக்கு முரணாகச் செயற்பட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட அரசாங்க அலுவலர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கும், ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல்
வட மாகாணம், கிழக்கு மாகாணம், மொனராகல மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டம் போன்ற பின்தங்கிய பிராந்தியங்கள் நீடித்து நிலவிய சிவில் முரண்பாடுகளின் தாக்கங்களாலும் வரலாற்று ரீதியான புறக்கணிப்புக்களாலும் தொடர்ந்தும் பல தசாப்தங்களாக கடுமையான பொருளாதார இழப்புக்களுக்கு முகங்கொடுத்து வருவதாலும்; தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இப்பின்தங்கிய பிராந்தியங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது பாரபட்சமான சுமைகள் திணிக்கப்பட்டுள்ளதால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளதாலும்; பொருளாதார ரீதியில் பின்னடைந்த இந்தப் பிரதேசங்களில் ஒப்புரவுமிக்க வளர்ச்சியையும், நிலைபெறுதகு அபிவிருத்தியையும் பால்நிலை வலுவூட்டலையும் மேம்படுத்தும் குறிக்கோளுடன் இக்கரிசனைக்குரிய விடயங்களை நிவர்த்தி செய்வதற்கென தனியானதொரு தேசிய முன்னெடுப்பினைத் தாபிப்பது அவசியமாக இருப்பதாலும்; 250 மில்லியன் டொலர் தொகையினை இலக்காகக் கொண்டு, 10+2 ஆண்டு காலப்பகுதியிலான நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்தும் இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளர்களிடமிருந்தும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும் மனிதாபிமானக் கொடையாளர்களிடமிருந்தும் கிடைக்கின்ற பங்களிப்புகளைத் திரட்டுவதற்கு ஒரு தேசிய அபிவிருத்தி நிதியத்தைத் தாபிப்பதற்கும்; அந்த நிதியினை விவசாயம், மீன்பிடி, மற்றும் குடிசைக் கைத்தொழில் என்பவற்றின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தைப் புத்துயிர்ப்பிப்பதற்கும், தொழில் வாய்ப்பையும் மற்றும் பெண்களின் சமூகப்-பொருளாதார ஊக்குவிப்பையும் மேம்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு வசதியை அபிவிருத்தி செய்வதற்கும், முடங்கிக் கிடக்கும் சொத்துக்களை செயலூக்கப்படுத்தி அவற்றை மீளப்பயன்படுத்துவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் (SME) மற்றும் கூட்டுறவுச்சங்கங்கள் ஆகியவற்றுக்கு உதவுவதற்கும், மீள்புதுப்பிக்கத்தகு சக்தியிலும் மற்றும் ஏனைய வணிக ரீதியில் சாத்தியமான கூட்டுத் தொழில்முயற்சிகளிலும் முதலிடுவதற்கும், திறன் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் மற்றும் இளைஞர் யுவதிகளுக்குக் கல்வி கற்பிக்கப் பயன்படுத்தவும்; உள்ளூர் திறனாற்றலை கட்டியெழுப்புவதற்காக முதலீடுகளிலுள்ள சாத்தியமான இடைவெளிகளை ஒழித்தல், நிதிகளின் பயனுள்ள மற்றும் வெளிப்படைத் தன்மைமிக்க பயன்பாடு ஆகியவற்றினை உறுதிப்படுத்தி, தொழில்நுட்ப உதவி வசதியைத் (TAF) தாபிக்க உதவுவதற்கும்; பொருளாதாரச் செயற்பாடுகளிலும் தீர்மானமெடுத்தல் விடயங்களிலும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு அளவிடக்கூடிய இலக்குகளைக் கொண்டு சகல முதலீட்டுத் துறைகளிலும் பால்நிலையின் உள்ளடக்கும்தன்மையினை உறுதிப்படுத்துவதற்கும்; இலங்கையின் பிரத்தியேகமான அபிவிருத்தி, நல்லிணக்கம், நிலைபெறுதகு அபிவிருத்தி என்பவற்றுக்கான ஒரு அவசர தேசிய நடவடிக்கையாக அந்த நிதியம் தாபிக்கப்படுவதைக் கருத்திற்கொள்வதன் மூலம் கருத்திட்டச் செயற்படுத்துகையில் ஒப்புரவுமிக்க பிராந்திய உள்ளடக்கம், வகைப்பொறுப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நிதியத்தை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் அந்தந்த அமைச்சுக்களுக்கும் மாகாண சபைகளுக்கும் உள்ளூர் அதிகாரசபைகளுக்கும் அதிகாரமளிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க
அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-06
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பேண்தகு அபிவிருத்திப் பேரவையின் ஆண்டறிக்கைகள்(ii) 2025 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையின் செயலாற்றுகை அறிக்கை(iii) 2025 ஆம் ஆண்டுக்கான அப்போதைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iv) அராசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(v) 2024/2025 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆண்டறிக்கை(vi) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ ரவி கருணாநாயக்ககைத்தொலைபேசி இலக்க பெயர்வுத்தன்மை மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பு சேவைகள் தொடர்பான விடயங்களைச் செயல்படுத்துதல்கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்தல் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்புகையிலை தொடர்பான நோய்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்கவும், கள்ள வர்த்தகத்தை ஒழிக்கவும், அரசுக்கு சட்டப்பூர்வ வருவாயை அதிகரிக்கவும் அரசு கையாளும் உத்தி தொடர்பாக 2026.06.11 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-(i) விலங்குகள் (திருத்தம்)(ii) தேசிய நீர்வழங்கல், வடிகால் சேவைகள் சபை (திருத்தம்)ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகடஅதனையடுத்து, 1808 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-05
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஆண்டறிக்கை(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii) 2025 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iv) 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஊவா மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கிழக்கு மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii) 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(viii) 2025 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(ix) 2025 ஆம் ஆண்டுக்கான இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி (திருமதி) நிலந்தி கொட்டஹச்சி (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜனக சேனாரத்ன(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன தென்னகோன்(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ கே.காதர் மஸ்தான்இலங்கையில் செயற்படும் காதி நீதிமன்றங்கள் குறித்த விபரங்கள்(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்செயற்படாத மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களால் அரசுக்குச் சொந்தமான வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்நெல் விலை நிர்ணயம், அரிசி இறக்குமதி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த அரசின் கொள்கை தொடர்பாக 2026.07.07 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) சபையால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்புப் பிரேரணை“அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக இணையவழிக் குற்றங்களுடன் இணைந்த மோசடி குறித்த அரசாங்க நிதிக் குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1807 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 6ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-04
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள்1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─ • 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVIII (58) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXII (32) ஆம் பகுதியையும் ; • 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXII (62) மற்றும் LXIII (63) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XXVIII (28) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLVI (46) ஆம் பகுதியையும்; மற்றும்• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் II (2) ஆம் பகுதியையும் மற்றும் மூன்றாம் தொகுதியின் I (1) ஆம் பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள ஏழு நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii) 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.06.01 முதல் 2026.06.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு(iv) 2023 ஆம் ஆண்டுக்கான தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஆயுள்வேத துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கை(viii) 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் ஆண்டறிக்கைகள்(ix) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை(x) 2024 ஆம் ஆண்டுக்கான நீர் வளச் சபையின் வருடாந்த அறிக்கை(xi) 2025 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசஉச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த அரசாங்கக் கொள்கை அடிப்படை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ ரவி கருணாநாயக்கதேசிய எல் நினோ தயார்நிலை மற்றும் பதிலளிப்பு திட்டம் தொடர்பான சிக்கல்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i) மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் பிரகாரம் நிலப்பரப்பு மற்றும் வடக்கு கிழக்கு மாகாண குடிப்பரம்பல் மீது ஏற்படும் தாக்கம் தொடர்பாக 2026.02.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.(ii) பொதுமக்களுக்குச் சொந்தமான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலுள்ள காணிகளை மீளளித்தல் தொடர்பாக 2026.07.08 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரிச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக“பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்)”எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் முன்மொழியப்பட்டன:-(i) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 240 - நிகழ்ச்சித்திட்டம் 02 - அங்கீகரிக்கப்பட்டது (ii) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் – நாளை வரை ஒத்திவைக்கப்பட்டதுஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“சலுகைக் கட்டண அடிப்படையில் வாடகைதாரர்களுக்கான வீட்டு வசதித் திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1803 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-07-24
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : இன்றைய நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது உறுப்பினர்கள் ஆற்றவிருக்கும் உரைகள் தொடர்பானது2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2026 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு(ii) 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை(iii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.(iv) 2025 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை(v) 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பெறுகை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை(vi) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(viii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை(ix) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை(x) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வலுசக்தி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xi) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சிவில் விமானப் போக்குவரத்து சேவை அதிகாரசபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே. சுஜித் சஞ்ஜய பெரேரா (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன - மூன்று மனுக்கள் (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசஊழியர் சேம நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தொடர்பான தகவல்கள்கௌரவ தொழில் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ ரவி கருணாநாயக்ககம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் டிஜிட்டல் உருமாற்ற முறைமையை செயல்படுத்துதல்தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்கெளரவ டி.வீ. சானக அவர்களுக்கு “பொருளாதார மற்றும் கிராமிய மூலவளங்கள் அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 36; எதிராக 152) பின்னர் தோற்கடிக்கப்பட்டது.அதனையடுத்து, 1816 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.