02

E   |   සි   |  

2026-07-07

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2026 ஜுலை 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கை இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVIII (58), LIX (59) மற்றும் LX (60) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLIII (43) மற்றும் XLIV (44) ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2025 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii)    2025 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2025 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நிறுவப்பட்ட புடவை மற்றும் ஆடை தொழிநுட்பவியல் துறையை, புடவை மற்றும் ஆடைப் பொறியியல் துறையாக திருத்துதல் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மாச்சு 20 ஆம் திகதிய 2480/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.05.05 முதல் 2026.05.29 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xi)    2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2025 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் உரிமைகள் காப்புறுதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்.
(xiii)    2025 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xiv)    2025 ஆம் ஆண்டுக்கான பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv)    2025 ஆம் ஆண்டுக்கான குருணாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, காலி, மாத்தறை, முல்லைத்தீவு, பதுளை, பொலன்னறுவை, களுத்துறை, கண்டி, அம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, அனுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டச் செயலகங்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(xvi)    2025 ஆம் ஆண்டுக்கான புத்தளம், நுவரெலியா, அம்பாறை, கொழும்பு, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டச் செயலகங்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்குகள்
(xvii)    2025 ஆம் ஆண்டுக்கான இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xviii)    2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xix)    2025 ஆம் ஆண்டுக்கான தாவரவியற் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xx)    2025 ஆம் ஆண்டுக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்ஹ                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
நெல் விலை நிர்ணயம், அரிசி இறக்குமதி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த அரசின் கொள்கை

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
கொழும்பு துறைமுக நகரத்திற்கான மீட்கப்பட்ட நிலங்களின் விபரங்கள் 


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    கனிம ஆய்வு, சுரங்கத் தொழில் மற்றும் தேசிய கனிமக் கொள்கை குறித்த விபரங்கள் தொடர்பாக 2026.06.24 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பதிலளித்தார்.
(ii)    இலங்கை துறைமுக அதிகாரசபையில் கிழக்கு முனைய கட்டுமானம் மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக 2026.06.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.
(iii)    ‘தித்வா’ புயலுக்குப் பிறகு இழப்பீடு, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை செயல்படுத்துதல் தொடர்பாக 2026.02.03 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.
(iv)    நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை தொடர்பான கூற்றொன்றினை வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்



ஒத்திவைப்புப் பிரேரணை
“நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1841 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுலை 8ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 



தொடர்புடைய செய்திகள்

2026-10-08

2026 ஒக்டோபர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்2 : “ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் III (3) மற்றும் IV (4) ஆம் பகுதிகள்(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதி ─ மின்சார வாகனங்கள் பயன்பாடு, பயன்பாட்டிற்குப் பிந்திய முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் தாக்கம் தொடர்பான மதிப்பீடு – இலங்கை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஓகத்து 14 ஆம் திகதிய 2501/88 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii)    2025 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ ரவி கருணாநாயக்கசுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதற்கான தேசிய உத்தி அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    ‘2018 முதல் 2026 வரையிலான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுற்றுலா செயற்றிறன் தொடர்பான விபரங்கள்’ மற்றும் ‘இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை’ தொடர்பாக முறையே 2026.07.22 மற்றும் 2026.09.09 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.(ii)    ‘சமூக, பொருளாதார மற்றும் நிதிப் பலன்கள் தொடர்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் மதிப்பீடு’ மற்றும் ‘இலங்கையின் ஏற்றுமதிகள் மற்றும் முதலீட்டு வருமானம்’ தொடர்பாக முறையே 2026.06.09 மற்றும் 2026.09.08 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிஅதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-10-07

2026 ஒக்டோபர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல் 2 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─•    2019 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஒன்பதாவது தொகுதியின் XLV (45) ஆம் பகுதியையும்; •    2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாவது தொகுதியின் XXVIII (28) ஆம் பகுதியையும்; •    2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் இரண்டாவது தொகுதியின் LXVII (67) ஆம் பகுதியையும்; •    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் இரண்டாவது தொகுதியின் LXXII (72)  மற்றும் LXXIII (73) ஆம் பகுதிகளையும்; •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஒன்பதாவது தொகுதியின் XLIX (49) ஆம் பகுதியையும்; மற்றும்•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI (6) மற்றும் VII (7) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VI (6) மற்றும் VII (7) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் II (2) மற்றும் III (3) ஆம் பகுதிகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2025 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii)    2018/2019 ஆம் ஆண்டுக்கான தேசிய கடதாசிக் கம்பனியின் ஆண்டறிக்கை(iv)    2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை(v)    2023 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(vii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் படையணியின் வருடாந்த அறிக்கை(viii)    2025 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(ix)    2025 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலனோம்பல் நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன்(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிரி பண்டாரபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசகூரை மீது சூரிய மின்சக்தி முறைமையின் புதிய ஒப்பந்தம் கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை குடிமகன் சிவராசா அனோஜன் கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் (i)    2027 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக“ஒதுக்கீடு”எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.(ii)    இலங்கையினுள் ஆட்கள் உட்பிரவேசிப்பதனையும் இலங்கையிலிருந்து புறப்படுவதனையும் கட்டுப்படுத்துவதற்காகவும்; இலங்கைப் பிரசைகளல்லாத ஆட்கள் இலங்கையில் தங்கியிருப்பதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும்; பயண ஆவணங்களை வழங்குவதற்காகவும்; (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தையும் 1971 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளிச்செல்கை அனுமதிப்பத்திரச் சட்டத்தையும் நீக்குவதற்காகவும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக“குடிவரவு”எனும் சட்டமூலத்தினை கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.ஒத்திவைப்புப் பிரேரணை“நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-10-06

2026 ஒக்டோபர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள்1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. அவர்களால் எனக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாடு தொடர்பான தீர்ப்பு2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல் 3 : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர் 4 : அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் நான்காவது தொகுதியின் I (1) மற்றும் II (2) ஆம் பகுதிகளையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் I (1) மற்றும் II (2) ஆம் பகுதிகள்(ii)    •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVI (66) ஆம் பகுதியையும்; மற்றும்•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதிச் சேவை ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii)    2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.08.03 முதல் 2026.08.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய மாகாண சபையின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(v)    2024 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான்                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி                    (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சஜித் பிரேமதாசஇலங்கை மத்திய வங்கியின் 'இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2026' அறிக்கையைத் தயாரிப்பதில் காலாவதியான புள்ளிவிபரங்களைப் பயன்படுத்துதல் கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்வட மாகாண ஆளுநரால் நீதி நிருவாகத்தில் முறையற்ற தலையீடு தொடர்பாக 2026.06.12 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் (i)    இலங்கைக் கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டிற்காக, ஆளுகைக்காக, ஒழுங்குப்படுத்தலுக்காக, ஊக்குவிப்புக்காக, விருத்திக்காக மற்றும் நிருவாகத்துக்காக இலங்கைக் கிரிக்கெட்டினைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; நல்லாட்சி, நோ்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, வகைக் கூறவேண்டியமை, உள்ளடக்குந்தன்மை மற்றும் சமமான வாய்ப்புக்களை வழங்குதல் போன்ற கோட்பாடுகளினூடாக கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும்; எல்லாப் பங்கேற்பாளர்களினதும் நல்வாழ்வினைக் காப்பதற்கும் ஊழல் மற்றும் வேறு முறையற்ற நடத்தையிலிருந்து கிரிக்கெட்டினை பேணிக்காப்பதற்கும்;  இலங்கைக் கிரிக்கெட்டின் அமைத்துருவாக்கம், தத்துவங்கள் மற்றும் பணிகளுக்கு ஏற்பாடுசெய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக“இலங்கைக் கிரிக்கெட்”எனும் சட்டமூலத்தினை கௌரவ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.(ii)    இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியே புரியப்பட்ட பயங்கரவாதச் செயல்களிலிருந்தும், பயங்கரவாதத்துடன் இணைந்த வேறு தவறுகளிலிருந்தும் மற்றும் பயங்கரவாதம் என்ற தவறாகவமைகின்ற குறித்தசில குறித்துரைக்கப்பட்ட செயல்களிலிருந்தும் இலங்கையின் தேசிய பந்தோபஸ்தையும் இலங்கை மக்களையும் பாதுகாப்பதற்காகவும்; இலங்கைக்கு வெளியே பயங்கரவாதத்துக்காக ஆயத்தஞ்செய்வதற்கு இலங்கைக் குடியரசின் ஆள்புலத்தையும் அதன் மக்களையும் பயன்படுத்துவதனைத் தடுப்பதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; பயங்கரவாதச் செயலொன்றை அல்லது பயங்கரவாதத்துடன் இணைந்த வேறேதேனும் தவறைப் புரிந்துள்ள எவரேனுமாளைக் கண்டுபிடிப்பதற்காகவும், அடையாளங்காண்பதற்காகவும், பற்றுவதற்காகவும், கைதுசெய்வதற்காகவும், தடுத்துவைப்பதற்காகவும், புலனாய்வு செய்வதற்காகவும், அவருக்கெதிராகக் குற்றவழக்குத்தொடுப்பதற்காகவும் மற்றும் அவரைத் தண்டிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்காகவும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான”எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்(ii)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை(iii)    பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணைஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“நைதெனியா காணியை தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கு மாற்றுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 7ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-09-25

2026 செப்டம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை(ii)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை நிலை வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்பிறல் 10 ஆம் திகதிய 2483/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(iii)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்பிறல் 10 ஆம் திகதிய 2483/18 இலிருந்து 2483/85 வரையிலான இலக்கங்களைக் கொண்ட 68 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்(iv)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைநிலை வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மே 11 ஆம் திகதிய 2488/03 மற்றும் 2488/04 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi)    2025 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி அனுஸ்கா திலகரத்ன                    (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ கே.காதர் மஸ்தான்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களிலுள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறை(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிதி மற்றும் ஏனைய பிரச்சினைகள்சிறப்புரிமைகள்பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டி.வீ. சானக அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 செப்தெம்பர் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.:-(i)    அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம் - திருத்தங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 158; எதிராக 63)(ii)    நீதித்துறை (திருத்தம்) - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 158; எதிராக 62) பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டதுஅதனையடுத்து, 2015 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks