E   |   සි   |  

2026-11-18

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2026 நவம்பர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கான பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள இரண்டு நாள் சர்வதேச செயலமர்வு 
2 : உத்தேச தொழில் சட்டங்கள் (சட்டமூலங்கள்) தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு அமர்வு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி - மூன்று மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன - மூன்று மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா - இரண்டு மனுக்கள் 
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை தேசிய பல்கலைக்கழகமொன்றுடன் இணைத்தல் 

மேற்சொன்ன வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2027) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாள்) 
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பாடசாலை மற்றும் முன்பள்ளி போஷாக்குத் திட்டத்திற்கான நிதியை அதிகரித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1855 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 19ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-11-21

2026 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : குழுநிலை விவாதத்தின் போதான ஆசன ஒதுக்கம்3 : குழுநிலைச் செலவினத் தலைப்புகளின் திகதி மாற்றம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்2027 வரைவு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் நிரல்களில் உத்தேச திருத்தங்களின் பட்டியல்குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - ஒன்பது மனுக்கள்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாசெம்மணி மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலைகௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.சிறப்புரிமைக் கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மேதகு இம்ரான் கான் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டமைஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - குழு (ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள்)(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“கிண்ணியா தள மருத்துவமனையை மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்வாங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 23ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-20

2026 நவம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.(ii)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.(iii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(iv)    2025 ஆம் ஆண்டுக்கான இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் (இலங்கை) வருடாந்த அறிக்கை(v)    2018 ஆம் ஆண்டுக்கான மத்திய கலாசார நிதியத்தின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க - இரண்டு மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஹங்சக விஜேமுணி - மூன்று மனுக்கள் (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே - நான்கு மனுக்கள் (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) தீப்தி வாசலகே(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்மண் கனியங்களின் அகழ்வு மற்றும் சுரங்க உரிமங்களை வழங்குவதற்கான சட்ட நிலை அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்இலங்கை பொறியியல் சேவையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக 2026.11.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2027) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஏழாவது நாள்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)ஒதுக்கீட்டுச் சட்டமூல (2027) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 157 பேரும் எதிராக 60 பேரும் வாக்களித்தனர். ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.அதனையடுத்து, 1859 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 21ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-19

2026 நவம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டுக்கான துருசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆண்டறிக்கை(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன - மூன்று மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட - ஐந்து மனுக்கள்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சஜித் பிரேமதாசஇலங்கை பொறியியல் சேவையிலுள்ள பிரச்சினைகள் இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2027) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஆறாவது நாள்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)இதனையடுத்து, 1833 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-17

2026 நவம்பர் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “இலங்கை வசதிகள் முகாமைத்துவ நிறுவகம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஹேமாலி வீரசேகர                 (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - எட்டு மனுக்கள் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சஜித் பிரேமதாசஇலங்கையின் இலவச சுகாதார சேவையிலுள்ள பிரச்சினைகள் மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2027) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட நான்காவது நாள்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 18ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks