01

E   |   සි   |  

2026-06-23

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2026 ஜுன் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : கௌரவ ஜீ. ஜீ. பொன்னம்பலம், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
3 : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
4 : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
5 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான “ஒவ்வாமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் இனங்காணுதல்” நிகழ்ச்சித்திட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVI (66) ஆம் பகுதியையும்; 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVI (56) மற்றும் LVII (57) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLI (41) மற்றும் XLII (42) ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I (1)  ஆம் பகுதி

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதி - தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 2022 செப்தெம்பர் முதல் 2024 ஆகஸ்ட் வரை அமுல்படுத்தப்பட்ட நீர் கட்டண திருத்தங்கள் தொடர்பான தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மீயுயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv)    2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 17 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 திசெம்பர் 23 ஆம் திகதிய 2468/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v)    2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை
(vi)    2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க  நிதிசார் முகாமைத்துவ சட்டத்தின் 51 ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, 2025 ஆம் ஆண்டுக்கான இறுதி வரவு செலவுத்திட்ட நிலை பற்றிய அறிக்கை
(vii)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 141, 143, 144, 157அ, 168 மற்றும் 190 ஆம் பிரிவுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மார்ச் 19 ஆம் திகதிய 2480/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii)    2024 ஆம் ஆண்டுக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ix)    2024 ஆம் ஆண்டுக்கான ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மையின் வருடாந்த அறிக்கை
(x)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்ஹ                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ருவன் ரணசிங்க                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ஹெட்டிஆரச்சி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கை துறைமுக அதிகாரசபையில் கிழக்கு முனைய கட்டுமானம் மற்றும் இதர பிரச்சினைகள்

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
விவசாயிகளின் போராட்டம் மற்றும் நெற் செய்கையிலுள்ள இதர பிரச்சினைகள் 


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக 2026.01.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.
(ii)    அரசாங்கத்தால் பிரதம மதத் தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளின் விபரங்கள் தொடர்பாக 2026.03.20 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன் (iv) ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-
(i)    சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(iii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மீன்பிடித் தொழிலில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1743 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 24ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-10-23

2026 ஒக்டோபர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்2 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை விழிப்புணர்வூட்டும் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2025 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ - இரண்டு மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ கே.காதர் மஸ்தான்ஜப்பானில் நடைபெற்ற 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செல்வி பாத்திமா ஷபீயா சேர்க்கப்படாமை(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்ஆசிரியர்களைச் சேவைக்குச் சேர்த்தல் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாமைமேற்சொன்ன வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    மாதவணை பகுதியில் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக 2026.09.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.(ii)    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக 2026.09.25 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“பெந்தர, கரந்தெனிய மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களை புதிய சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1759 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-10-22

2026 ஒக்டோபர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்2 : கல்வி மறுசீரமைப்பு குறித்து கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு நிகழ்ச்சிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்(ii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை(iii)    2024 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ. பீ. சரத்    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க  - மூன்று மனுக்கள்               (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசவரவுசெலவுத் திட்டம்-2026 இன் முன்மொழிவுகளின் அமுலாக்கம் மற்றும் பௌதீக, நிதிசார் முன்னேற்றம்(ii)    கௌரவ ரவி கருணாநாயக்கஅமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மோதல் காரணமாக இலங்கைக்கு ஏற்படும் பொருளாதார மற்றும் நிதிசார் தாக்கம்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புகளிலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2026.08.18 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.(ii)    ‘நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள்’ மற்றும் ‘நாட்டில் தித்வா பேரழிவிற்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் எல் நினோ நிலைமை’ தொடர்பாக முறையே 2026.09.10 மற்றும் 2026.09.23 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் (ச.வ.-ஓ 8/2026) – திருத்தங்களுடன்(ii)    நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் (ச.வ.-ஓ 11/2026) – திருத்தங்களுடன்(iii)    தொழில் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)(iv)    தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022) (v)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2015)(vi)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2016)(vii)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2017)(viii)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2018)(ix)    ரணவிரு சேவா அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023)(x)    ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2022)(xi)    ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2023)ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“தாய்லாந்து துணைப் பிரதமருக்கு இராஜதந்திர வரவேற்பை வழங்குவதில் அரசாங்கத்தின் குறைபாடுகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1758 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-10-21

2026 ஒக்டோபர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்2 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்3 : “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்4 : புதிய குழு காப்புறுதித் திட்டம் குறித்து கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு நிகழ்ச்சிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2025 ஆம் ஆண்டுக்கான பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அப்போதைய தொழில்நுட்ப அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii)    2025 ஆம் ஆண்டுக்கான தென் மாகாண சபையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்   119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்சட்டவிரோத மது அருந்துதல் மற்றும் புதிய மதுபான உரிமங்கள் தொடர்பான பிரச்சினைகள்கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாதிலீபன் நினைவு நாள் தொடர்பான பிரச்சினைகள்கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்‘மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் கொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணை விபரங்கள்’ மற்றும் ‘இன நல்லிணக்கத்தையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்’ தொடர்பாக முறையே 2026.08.07 மற்றும் 2026.10.09 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் எழுப்பிய வினாக்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் (87 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப்பொறுப்புக்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக“நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தம்)”எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 12 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை (ii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 243 - நிகழ்ச்சித்திட்டம் 02(iii)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2021) (iv)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2022) (v)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2023) (vi)    பீ.சீ.சீ. லங்கா லிமிட்டட் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2021/2022) (vii)    பீ.சீ.சீ. லங்கா லிமிட்டட் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2022/2023) (viii)    தேசிய உப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2021/2022) (ix)    தேசிய உப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2022/2023) (x)    தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2022) (xi)    இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023) (xii)    இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2023)ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டாரஅதனையடுத்து, 1732 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-10-20

2026 ஒக்டோபர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்3 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்4 : தேசிய ஊழல் தடுப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ் பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளின் செயலாக்கத்திற்குத் தலைமையேற்கவும் மேற்பார்வையிடவும் 13 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் நியமனம்5 : உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து எதிர்க்கட்சியினரால் கோரப்பட்ட பாராளுமன்ற விவாதம்6 : டிஜிட்டல் வடிவத்திலான பாராளுமன்ற வெளியீடுகள்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLIX (49) பகுதியையும்; •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் L (50) மற்றும் LI (51) பகுதிகளையும்; மற்றும்•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VIII (8), IX (9), X (10), XI (11) மற்றும் XII (12) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VIII (8) IX (9), X (10) மற்றும் XI (11)  ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் IV (4), V (5) மற்றும் VI (6)  ஆம் பகுதிகள்(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் VI (6) ஆம் பகுதியையும்,  நான்காவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் V (5) ஆம் பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(iii)    2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லைஃப் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(iv)    2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(v)    2026 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii)    1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மற்றும் 1998 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஓகத்து 18 ஆம் திகதிய 2502/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(viii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் எஸ் எல் ரி கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவமனமானது ஸ்ரீலங்கா டெக்னொலொஜி கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்தல் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 16 ஆம் திகதிய 2384/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(ix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனத்தினால் வழங்கப்படும் புடவை மற்றும் ஆடைக் கற்கைகளில் விஞ்ஞான இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 யூலை 22 ஆம் திகதிய 2446/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(x)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லமிட்டெட்டினால் வழங்கப்படும் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஓகத்து 21 ஆம் திகதிய 2450/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கே ஐ யூ கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் அக்குபஞ்சர் மருத்துவ விஞ்ஞானத்தில் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 17 ஆம் திகதிய 2454/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் அமெரிக்கன் கொலேஜ் ஒப் ஹயர் எடியுகேஷன் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் உளவியல் விஞ்ஞான இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 22 ஆம் திகதிய 2455/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xiii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் ஈசொப்ட் மெற்றோ கம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவமனமானது ஈசொப்ட் யுனி (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்தல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 13 ஆம் திகதிய 2458/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xiv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் எஸ்எல்ரி கம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வணிக பகுப்பாய்வில் விஞ்ஞான இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025   திசெம்பர் 23 ஆம் திகதிய 2468/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xv)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை(xvi)    2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஆண்டறிக்கை(xvii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை(xviii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை(xix)    2025 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(xx)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேல் மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை(xxiii)    2025 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(xxiv)    2025 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(iii)    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசகாவந்திஸ்ஸ தந்த யானையின் மரணம்கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க2026 ஒக்டோபர் 17 அன்று நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    2026 ஒக்டோபர் 17 அன்று நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை பற்றிய கூற்றொன்றினை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் முன்வைத்தார்.(ii)    காவந்திஸ்ஸ தந்த யானையின் மரணம் பற்றிய கூற்றொன்றினை சுற்றாடல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி அவர்கள் முன்வைத்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i)    வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் - வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலை தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014 ஆம் ஆண்டு செத்தெம்பர் 24 ஆந் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானது(ii)    ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் - நாடுகளுக்கிடையேயான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்துக்குப் பயன்கொடுப்பதற்கும்; பயனுள்ள தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பினூடாகப் பாரதூரமான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவும் புலனாய்வு செய்வதற்காகவும் மற்றும் அவற்றுக்கெதிராக குற்றவழக்குகளைத் தொடுப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியற் குழுக்களினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானதுகௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுகொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2025 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 டிசெம்பர் 21 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக.ஒத்திவைப்புப் பிரேரணை“நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப்  பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks