கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அராசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான வரை. சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
தொல்பொருளியல் திணைக்களத்தின் சிறுபான்மை இன மற்றும் மத சமூகங்களுக்கு எதிரான பாகுபாடான நடவடிக்கைகள்
கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கையில் பரிமாற்றம் மற்றும் தீர்வுக்காக கடின நாணயங்களின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் மற்றும் ஏற்பு தொடர்பான பிரச்சினைகள்
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா
கௌரவ நீதி அமைச்சரினால் செய்யப்பட்ட சைகை
ஒத்திவைப்புப் பிரேரணை
“தற்பொழுது நிலவும் நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1751 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஏப்ரல் 09ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-04-10
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2023 ஆம் ஆண்டுக்கான கூட்டாட்சி முகாமைத்துவ அதிகார சபையின் வருடாந்த அறிக்கை(ii) 2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்ஹ (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம் (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்அஸ்வெசுமவின் விபரங்கள்கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ எம். ஏ. எம். தாஹிர்புத்தளம் முந்தலமவில் உள்ள மஸ்ஜிதுக்கு காணி அன்பளிப்புகௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.சிறப்புரிமைக் கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கி தொடர்பாக தன்னால் கேட்கப்பட்ட பல வினாக்களுக்கு பதில் கிடைக்கப்பெறாமைஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 83 ஆம் இலக்க விடயம்)வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 49; எதிராக 153) பின்னர் தோற்கடிக்கப்பட்டது.அதனையடுத்து, 1812 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-04-09
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(ii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(iii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(iv) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/55 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(v) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 52 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 பெப்புருவரி 13 ஆம் திகதிய 2475/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(vi) 2021 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார - ஐந்து மனுக்கள் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாமாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முறைகேடு, வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் ஊடகக் கட்டுப்பாடு(ii) கௌரவ சஜித் பிரேமதாசலக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவில் உள்ள சிக்கல்கள்கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக 2026.02.06ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i) நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தைத் திருத்துவதற்கானது(ii) பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) - 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்தைத் திருத்துவதற்கானதுகௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுகொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவானது தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2025 நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 யூலை 21 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i) தரைப்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) கடற்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iii) வான்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iv) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 137; எதிராக 27)(v) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்ஒத்திவைப்புப் பிரேரணை“2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1816 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-04-07
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள்1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 2 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள்3 : “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்4 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXI (31) மற்றும் XXXII (32) ஆம் பகுதிகள்(ii) இலங்கை இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் ─ லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக லங்கா நிலக்கரி கம்பனியால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவு செயன்முறை மற்றும் 2025 / 2026 காலப்பகுதிக்கான நிலக்கரி பெறுகைகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(ii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபையின் ஆண்டறிக்கை(iii) 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை(iv) 2024 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை(v) 2024 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை(vi) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த மற்றும் பாலிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை(vii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை(viii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2026 மார்ச்சு 28 ஆம் திகதிய 2481/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்(ix) 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 24(4) ஆம் பிரிவு மற்றும் 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு என்பவற்றின் பிரகாரம் 2025 ஒக்டோபர் 03 ஆந் திகதி முதல் 2025 டிசம்பர் 31 வரையான “வீரமன்ட் நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிதி ஏற்பாட்டு மாற்றல்” தொடர்பான தகவல் அறிக்கையிடல்(x) 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.02.02 முதல் 2026.02.27 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் துறைகளை நிறுவுதல் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 திசெம்பர் 03 ஆம் திகதிய 2465/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்(xiii) 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவுகள் 18, 24, 28 மற்றும் 30 உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, சொல்லப்பட்ட சட்டத்தின் 44 ஆம் பிரிவின் (எ) மற்றும் (ஒ) பந்திகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 17 ஆம் திகதிய 2471/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(xiv) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 21, 22, 23, 24 மற்றும் 24அ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 05 ஆம் திகதிய 2470/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(xv) அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xvi) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை(xvii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் குமார கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(iii) உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ - இரண்டு மனுக்கள் (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ஜயசுந்தர (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ திசாநாயக்க (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசஎரிபொருள் பாதுகாப்பு, விநியோகம், வரிவிதிப்பு போன்றவை தொடர்பான பிரச்சினைகள்கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை அரச பல்கலைக்கழகத்துடன் இணைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i) 07 முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்களை தேசிய வீரர்களாக அறிவிக்கக் கோரிக்கை தொடர்பாக 2026.01.21ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.(ii) தலைமன்னார் ராமேஸ்வரத்தில் இயக்கப்படும் படகு சேவைகளின் விபரங்கள் தொடர்பாக 2025.08.21ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர், கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – திருத்தங்களுடன்(ii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி(iv) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்(v) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல்(vi) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018)அதனையடுத்து, 1806 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஏப்ரல் 08ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-03-20
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர் பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2022/2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நனோ தொழில்நுட்ப (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(ii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(iii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக் கூற்றுமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ கே.காதர் மஸ்தான்அரசாங்கத்தால் பிரதம மதத் தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளின் விபரங்கள்(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட கூட்டுப் புதைகுழிகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகளின் விபரங்கள்கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.ஒத்திவைப்புப் பிரேரணை “உலகின் தற்போது நிலவும் நிலைமை” பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.